world

தீக்கதிர் உலக செய்திகள்

ஐரோப்பிய தலைவர்களை விமர்சித்த ஹங்கேரி பிரதமர் 

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவுவோம் என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் தலைவர் காஜா கல்லாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் வருந்தத்தக்கது, பயனற்றது என ஹங்கேரி  பிரதமர் விக்டர் ஓப்ரான் விமர்சித்துள்ளார். டிரம்ப் மற்றும் புடின் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பயனற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றனர். மேலும் இவ்வறிக்கை நேட்டோவின் மோசமான தலைமைக்கு சான்று என விமர்சித்துள்ளார். 

8.25 லட்சம் சிரியர்கள்  நாடு திரும்பினார்கள் 

சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்து சென்றிருந்த மக்களில் சுமார் 8,25,000 க்கும் அதிகமானோர் டிசம்பர் மாதம் முதல் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என ஐ.நா  மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. மேலும் 20 லட்சம் மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் வடமேற்கு சிரியாவில் இருப்பதாகவும், அவர்கள் மோசமான இடங்களில்  ஆபத்தான முறையில் தங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசாவில் ஒப்பந்தத்தை மீறி  தொடரும் தாக்குதல்கள் 

காசாவில் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. பிப்.13 அன்று காசாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமிற்கு அருகே ஆளில்லா விமானம் மூலமாக ஒரு ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. போர் நிறுத்தம் அமலானதில் இருந்து இஸ்ரேல் பலமுறை ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி சுமார் 80-க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்துள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டனர் என தெரிவிக்கவில்லை.

“கொள்ளையடித்து படுகொலை”: அமெ.மீது கடும் சாடல்

“கொள்ளையடித்து படுகொலை செய் வதன் மூலமே அமெரிக்கா வாழ் கின்றது” என வட கொரிய அரசுத் தொலைக்காட்சி செய்தி நிறுவனம் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் காசாவை ஆக்கிரமிக்கப்போவதாக டிரம்ப் கொடுத்துள்ள அறிவிப்பு உலகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பாலஸ்தீனர்களின் குறைந்தபட்ச அமைதி மற்றும் பாதுகாப்பையும் அழித்துவிடும் என கூறியுள்ளது டன், பனாமா, மெக்சிகோ, கனடா ஆகியவற்றை ஆக்கிரமிக்கும் முடிவையும் அது விமர்சித்துள்ளது.

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு:  11 தொழிலாளர்கள் பலி 

பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தில் பிரி வினைவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் 11 பேர் பலியாகி யுள்ளனர். நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் வேலை க்கு சென்ற லாரியை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தியுள்ளனர். வெடிகுண்டுக் கருவி ஒன்று சாலை யோரத்தில் வைக்கப்பட்டிருந்தது. தொலைவில் இருந்து அதனை இயக்கி தொழிலாளர்கள் பயணித்த லாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பெயர் கூற விரும் பாத ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.