world

img

உக்ரைன் போரில் வெற்றி பெற்றது ஆயுத வியாபாரமே!

வாஷிங்டன், மார்ச் 10 - உக்ரைனின் சில பகுதிகளை விடுவிக்கப் போகிறோம் என்று அறிவித்துக் கொண்டு ரஷ்யா மேற்கொண்ட போர் நடவடிக்கையால் இரு  தரப்புக்கும் வெற்றி கிடைக்காமல், இறுதியில் ஆயுத வியாபாரிகளுக்குதான் வெற்றி கிடைத்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய மொழி பேசுபவர்களை உக்ரைன் ஒடுக்குவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், ரஷ்யா உக்ரைன் மீது போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஓராண்டிற்கும் மேலாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. டோனெட்ஸ்க் பகுதி யை மீட்பதில் ரஷ்யா கவனம் செலுத்துகிறது. முக்கியமான நகரங்களை முழுமையாக முற்றுகையிட்டு ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அந்த நகரங்கள் தங்கள் வசம் வந்துவிட்டதாக உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக உக்ரைனுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் ஆயுத உற்பத்தியை அமெரிக்கா உள்ளிட்ட மேற் கத்திய நாடுகள் பெருக்கியுள்ளன. அமைதி யை உருவாக்குவதற்கான எந்தவித பேச்சுவார்த்தை யையும் இந்த நாடுகள்

முன்மொழியவில்லை. மாறாக, உக்ரைனின் தலையில் ஆயுதங்களைக் கட்டி விடுகிறார்கள். 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்பப் போவ தாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.  உலகம் முழுவதும் தொழில் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் மட்டும் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. போர் தொடங்கியதில் இருந்து நடப்பாண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதி வரையில் உக்ரைனுக்கு  அமெரிக்கா அளித்த ராணுவத் தளவாடங்களின்  மதிப்பு 4 ஆயிரத்து 660 கோடி அமெரிக்க டாலராக இருக்கிறது. இது 11 மாதங்களுக்கான செலவாகும்.  பத்தாண்டு காலம் ஆப்கானிஸ்தா னில் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் செலவு சராசரியாக ஆண்டுக்கு 4 ஆயிரத்து 340 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. “இதற்கு முன்பாக அமெரிக்கா நடத்திய போர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால்தான் எவ்வளவு அதிகமாக உக்ரைனுக்கு செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்” என்று ஆய்வாளர்களில் ஒருவ ரான மார்ட்டின் ஆர்ம்ஸ்ட்ராங் கூறுகிறார். அமெரிக்கா மேற்கொண்ட இந்த செலவில், அந்நாட்டின் ராணுவத் தலைமையகம் அனுப்பிய 500 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான தளவாடங்களைச் சேர்க்கவில்லை.

மேலும் ஆயுதங்கள்

சீனாவின் 12 அம்ச அமைதித் திட்டத்திற்கு ரஷ்யா ஆதரவளித்த வேளையில், அது பற்றிக் கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. உக்ரைன் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தா லும் மேலும் போரைத் தொடரவே அமெரிக்கா விரும்புகிறது. ஜனாதிபதிக்குள்ள சிறப்பு அதி காரத்தைப் பயன்படுத்தி இந்த ஆயுதங் களுக்கான நிதி திரட்டப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்டோனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.  இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்கும் வகையில் அந்நாட்டை தயார்படுத்துவதாக அமெரிக்கா சொல்லிக் கொள்கிறது. உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் அந்நாட்டில் இறங்கியவுடன் அழித்தொழிக்கப் படும் என்று அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனடோலி அன்டோனோவ் எச்சரித்துள்ளார். உக்ரைன் -ரஷ்யா நெருக்கடியில் அமெரிக்கா  நேரடியாகவே தலையிட்டு வருவதாக ரஷ்யா  குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவின் குடி யரசுக்கட்சியினரும் ஆயுதங்களை அனுப்பு வதற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார்கள். அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் பல ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை அனுப்பி வரு கின்றன. அதே வேளையில், ரஷ்யா மீதான தடை களால் ஐரோப்பிய நாடுகள்தான் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
 

;