world

img

ஜனநாயகம் எங்கே?

நெதர்லாந்து பயணத்தை மேற் கொண்டிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், அங்கு நடந்த கூட்டமொன்றில் பேசுகையில், பார்வையாளர் பகுதியில் இருந்து கேள்விக்கணைகள் தொடுக் கப்பட்டன. ஐரோப்பிய இறையாண்மை பற்றி, தி ஹேக் நகரில் உள்ள நெக்சஸ் கல்வி நிலையத்தில் அவர் பேசத் தொடங்கிய போது, பார்வையாளர் ஒருவர் எழுந்து, “நாம் எதையோ இழந்துவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். பிரான்சில் ஜனநாயகம் எங்கே?” என்று கேட்டார். மற்றொரு பார்வையாளர் எழுந்து நின்று,  “பிரான்ஸ் நாடாளுமன்றத்தை சந்திக்காமல் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தது ஏன்?” என்று வினா எழுப்பினார். என்னை விடை யளிக்க அனுமதிப்பீர்களா என்று மக்ரோன்  கேட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால், பார்வையாளர்கள் தொடர்ந்து அவருக்கு  எதிராகக் குரல் எழுப்பினர். வன்முறைக்கான  ஜனாதிபதி என்று முழக்கமிட்டனர். மக்கள் எதிர்ப்பு என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதி என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.