அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கக் கல்வி நிலையங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் சுமார் 15 கல்விநிலையங்களில் துப்பாக்கிச்சூடுகள் நடந்துள்ளன.