world

img

தீக்கதிர் உலக செய்திகள்

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின்  தலைவர் கனடாவில் கைது

அமெரிக்காவில் ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற பெயரில் காலிஸ்தான் பிரிவினை அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இவ்வ மைப்பின் தலைவராக உள்ள குர்பத்வந்த் சிங் பன்னுன் இந்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார். இவருடன் மிக நெருக்க மாக உள்ள அவ்வமைப்பின் கனடா நாட்டு பிரி வின் நிர்வாகியான இந்திரஜித் சிங் கோசல் (36) என்ற நபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள் ளார். ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இவர் அவ்வமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார் என கூறப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தில் இருந்து  சாஹேல் நாடுகள் விலகல்  

சாஹேல் நாடுகளான மாலி, புர்கினா ஃபாசோ ,நைஜர் ஆகியவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்திலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் அடக்குமுறை செய்வதற்கான புதிய கால னித்துவ கருவியாக இந்நீதிமன்றம் மாறி விட்டது. போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு போன்ற வழக்குகளை விசாரிப்பதில் இந்த நீதிமன்றம் தோல்வி யடைந்துள்ளது என அந்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

உலகளவில் யுரேனியம் செறிவூட்டல்  முன்னணி வகிக்கும் ரஷ்யா 

அணுமின் நிலையங்களுக்கான யுரேனியம் செறிவூட்டும் பணியில் ரஷ்யா தொடர்ந்து உலகின் முன்னணி நாடாக உள்ளது. இந்த இடத்தை மேற்குலக நாடுகளால் அடைய முடியவில்லை என ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனமான ரோசாடோமின் மூத்த அதிகாரி கிரில் கோமரோவ் தெரிவித்துள்ளார். உலக யுரேனியம் செறிவூட்டல் சந்தையில் ரஷ்யாவின் பங்கு 40 சதவீதமாகும். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள சுமார் 25 சதவீத  அணுமின் நிலையங்கள் ரஷ்யாவின் யுரேனியத்தையே சார்ந்துள்ளன. 

ரஷ்ய தலைநகர் மீது  உக்ரைன் டிரோன் தாக்குதல் 

ரஷ்ய தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோப்யானின் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்கு அதிகளவிலான டிரோன்கள் பயன்படுத்தவில்லை, 10 டிரோன்கள் மட்டுமே பறந்து வந்தன. அதனையும் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாகிஸ்தானில் போலியோ பாதிப்பு  27 ஆக அதிகரிப்பு 

பாகிஸ்தானில் போலியோ பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அந்நாட்டின் சிந்து மாகாணத்தில் போலியோ பாதிப்புக்குள்ளான நபர் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம் 2025 இல் நாடு முழுவதும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு சிந்து மாகாணத்தில் ஏழு பேருக்கும் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 18 பேருக்கும் போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.