சிதம்பரம் இரவிச்சந்திரன்
அண்டார்டிகாவில் செயல்படும் உலகின் தமிமை வாய்ந்த தபால் நிலையத்தைக் கவனிக்க, அங்கு வாழும் 1500 ஜெண்ட்டு (gentoo) வகையைச் சேர்ந்த பென்குயின்களைக் கணக்கெடுத்து பாதுகாக்க யு.கே.அண்டார்டிகா பாரம்பரிய அமைப்பு (U K Antartica Heritage Trust) கோரிப் உலகம் முழுவதிலும் இருந்து பெற்ற 6000 விண்ணப்பங்களில் பிரிட்டனைச் சேர்ந்த நான்கு பெண்கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் புதிதாக திருமணம் ஆனவர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை நாள் முழுவதும் பகலாகவே இருக்கும் இந்த தொலைதூரப் பகுதிக்கு கடந்த இருஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எவரும் செல்லவில்லை. அண்டார்டிகா போர்ட் லாக்ராய் (Port Lockroy) என்ற பகுதியில் கௌடி யர் தீவில் (Goudier island) தபால் நிலையம் அமைந் துள்ளது. புதிதாக திருமணம் ஆனவர் தன் கணவனை விட்டுவிட்டு தனி தேனிலவு கொண்டாடப் போவதாக மகிழ் வுடன் கூறுகிறார். இது போல மற்ற மூன்று பெண்களும் அங்கு செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மேரி ஹில்டன் (Mairi Hilton), லூஸி புருசோன் (Lucy Bruzzone), கிளேர் பாலண்டைன் (Clare Ballantyne), நேட்டலி கார்பெட் (Natalie Corbett) ஆகியோரே அந்த நால்வர். சுழிநிலைக்கும் தாழ்வான வெப்பநிலையில் இவர்கள் அங்கு ஐந்து மாதங்கள் வாழவிருக்கின்றனர். மின்சாரம் கிடையாது. ப்ளெஷ் கழிப்பறை இல்லை. உறங்குவது கரடுமுரடான படுக்கையில்தான். ஆனால் வாழ்வில் அரிதாகவே கிடைக்கும் பென்குயின்களை அவை பனிப்பரப்பில் சுதந்திரமாக சுற்றித் திரிவதை பார்க்கமுடியும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 30 வயதான ஹில்டன் ஆஸ்திரேலியாவில் நான்கு ஆண்டு இயற்கைப் பாது காப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். பனிக் கண்டத்தில் வாழும் 1500 பென்குயின்களைக் கணக்கெடுப்பது, அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்வது இவர் பொறுப்பு. லண்டனைச் சேர்ந்த 40 வயதான புருசோன், ஆர்க்டிக் கண்டத்தின் ஸ்வால்பார்ட் (Svalbard) பகுதியில் தலைமை விஞ்ஞானியாக 3 மாதம் பணி புரிந்தவர். இவரே குழுவின் தலைவர்.
தபால்நிலையமும் பரிசுப் பொருட்கள் விற்பனையும்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் புவி அறிவிய லில் புதிதாக பட்டம் பெற்ற 23 வயதான பாலண்டைன், லங்காஷைர் பகுதியைச் சேர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் நூற்றிற்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு இங்கு இருக்கும் தபால் நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் கடிதங்களை இவரே இந்த முறை கையாள்வார். கார்பெட் புதிதாக திருமணம் ஆனவர். இவர் அங்கு செல்லப்பிராணிகளுக்கான பொருட்களை விற்கும் கடை வைத்திருக்கிறார். இவரே அண்டார்டிகாவின் மிகப்பழமையான முகாமில் இருக்கும் மிகப் பழமையான அன்பளிப்பு கடைக்குப் பொறுப்பாளர். ஒவ்வொரு ஆண்டும் இப்பகு திக்கு விஞ்ஞானிகள், உதவியாளர்கள் என 18,000 பேர் வருகின்றனர். நவம்பர் முதல் மார்ச் வரை இங்கு ஆண்டு தோறும் கோடைகாலம். அபடின்ஷைர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான விக்கி இங்லிஸ் (Vicky Inglis) இந்த நால்வருக்கு உதவும் நோக்கத்துடன் அங்கு பத்து வாரங்கள் தங்கி பொது உதவியாளராக பணி புரிவார். வாழ்வில் எப்போதேனும் கூட கிடைக்காத அரிய வாய்ப்பாகவே அண்டார்டிகா தபால் நிலையத்திற்கு செல்லும் வாய்ப்பும், பென்குயின்களைக் கணக் கெடுக்கும் பணியும் கிடைக்கும். இப்போது பெண்கள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அங்கு செல்லும் ஆர்வலர்கள் அனைவரும் பெண்களாக உள்ளது உலகப் பெண்களுக்கே பெருமை தரும் ஒன்று என்பதில் ஐயமில்லை.