what-they-told

img

தக்காளி விலை 10 ரூபாய் : முருங்கை ரூ.400க்கு விற்பனை

சென்னை,டிச.19- வெங்காயத்தின் விலை  சற்று குறைந்த நிலையில் முருங்கைக்காய் ஒரு கிலோ  ரூ.400க்கு விற்பனையானது. தக்காளி விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. கிலோ ரூ. 10க்கு விற்பனை யானது. கோயம்பேடு மார்க்கெட் டுக்கு திண்டுக்கல், கிருஷ் ணகிரி மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்க ளிலிருந்து தக்காளி தினமும் விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சில்லரையில் 1 கிலோ ரூ.40க்கு விற்ற தக்காளி படிப்  படியாக குறைந்து தற்போது  ரூ. 10-க்கு விற்பனை செய்யப்  பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு 45 முதல் 50 லாரிகளில் வந்து  கொண்டிருந்த தக்காளி வரத்து அதிகரித்து 60 லாரி களில் விற்பனைக்கு வந்துள்  ளது. விளைச்சல் அதிகம் காரணமாக பல்வேறு பகுதி களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருவதால் விலை குறைந்து உள்ளது. மேலும் விலை குறைந்து  மினி வேன் மூலம் வியாபாரி களுக்கு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக சென்று விடுவதால் கடந்த சில நாட்க ளாகவே கோயம்பேடு சந்தை யில் தக்காளி மொத்த விற் பனை மிகவும் மந்தமாக உள்ளது.  வெங்காயத்தின் விலை ரூ. 160 முதல் 110 வரைக்கும் விற்பனையானது. முருங் கைக் காய் விலை கடந்த வாரம் ரூ. 600 வரை உயர்ந்தி ருந்தது. தற்போது ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.