what-they-told

img

2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்; நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அறிவிப்பு இல்லை

சென்னை, டிச. 2 - ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் இம்மாதம் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.   திங்களன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணை யர் பழனிசாமி, தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனக் கூறினார்.

இதன்படி, ஊராக உள்ளாட்சி அமைப்பு பதவிகளான ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு, வருகிற டிசம்பர் 6 வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய டிசம்பர் 13 கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை டிசம்பர் 16 அவற்றை திரும்ப பெறுவதற்கான இறுதி நாள் டிசம்பர்  18 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 27 அன்றும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 30 அன்றும நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை 2020 ஜனவரி 2 அன்று  நடைபெறும் என்றும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு தெரிவானவர்கள் ஜனவரி 6 அன்று பதவியேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோர், ஜனவரி 11 அன்று நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளான ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சித் தலைவர்,  ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட  ஊராட்சி கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குப்பதிவின்போது வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்ப டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

;