tamilnadu

img

ஊரக உள்ளாட்சி தேர்தல் - மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வெற்றி

கோவை

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக, சிபிஎம் உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தின் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத் தப்பட்டது. கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்கு, 155 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப் பினர் பதவிக்களுக்கு, 228 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்களுக்கு, 20 34 ஊராட்சி வார்டு உறுப்பினர் பத விக்கும் என மொத்தம் 2434 பத விக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 315  மையங்களில்  வியாழனன்று   தொடங்கியது. இதில் ஆளும் கட்சியான அதிமுகவின் அதிகார பலம், பணபலம் அனைத் தையும் முறியடித்து கடந்த தேர் தலை காட்டிலும் திமுக கூட்டணி பெருமளவு இடங்களை கைப் பற்றியது.

இதன்படி கோவை மாவட்டம் மொத்த மாவட்ட கவுன்சிலர் 17 இடங் களில் அதிமுக- 10, பாஜக- 2 என 12 இடங்களிலும், திமுக – 5 இடங் களையும் கைப்பற்றியது. இதே போல 155 மொத்த ஒன்றிய கவுன் சிலர் பதவியிடங்களில் அதிமுக- 83, பாஜக-3, தேமுதிக- 2 என அதி முக கூட்டணி வெற்றி – 88 இடங் களிலும், திமுக- 54, காங்கிரஸ்- 4, மதிமுக- 1 என திமுக கூட்டணி 59 இடங்களிலும் சுயேட்சைகள் 8 இடங்களிலும் வெற்றிபெற்றனர். இந்த தேர்தலில் கடந்த முறை அதிமுக வெற்றிபெற்ற பல இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஊராட்சி மன்ற தலை வர், ஊராட்சி மன்ற வார்டு உறுப் பினர் பதவிகளில் ஏராளமான வற்றை திமுக கூட்டணி கைப்பற்றி யுள்ளது. குறிப்பாக கீரணத்தம் ஊராட்சியை திமுக கூட்டணி 9 வார் டுகளையும் முழுமையாக கைப்பற் றியது. இதில் கீரணத்தம் ஒன்றிய கவுன்சில் திமுகவின் கருப்புசாமி, பஞ்சாயத்து தலைவர் திமுக பார்த்து வராசு (எ) பழனிச்சாமி, 1 ஆவது வார்டு கல்பனா (திமுக), 2 ஆவது வார்டு ரஞ்சிதாமணி (சிபிஎம்), 3  ஆவது வார்டு கே.வடிவேல் (சிபிஎம்) 4 ஆவது வார்டு ஜி.குணசுந்தரி (கொமதேக), 5 ஆவதுவார்டு தமி ழரசி (திமுக), 6 ஆவது வார்டு ஆர்.பால்ராஜ் (திமுக), 7 ஆவது வார்டு எம்.ரேவதி (மதிமுக), 8 ஆவது வார்டு என்.பரமேஷ்வரன் (கொமதேக) 9 ஆவது வார்டு ஆர்.கோ பால் (சிபிஎம்) ஆகியோர்  வெற் றிபெற்றனர். இதனையடுத்து வெற் றிபெற்ற திமுக, சிபிஎம், கொம தேக, மதிமுக உறுப்பினர்கள் வெள்ளியன்று கோவை காந்தி புரம் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவ லகத்திற்கு வந்தனர். இங்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்றனர். இதேபோல கோவை மாவட்டத் தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்க ளாக மார்க்சிஸ்ட் கட்சியினர் பர வலாக வெற்றிபெற்றுள்ளனர்.

இதில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றி யத்திற்குட்பட்ட வெள்ளமடை ஊராட்சி வடக்கு தொட்டிபாளை யத்தில் 9 ஆவது வார்டில் சந்தி ரசேகர், அத்திபாளையம் ஊராட்சி யில் 4 ஆவது வார்டில் மணி லட்சுமணன், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் தடாகம் ஊராட்சி 9 ஆவது வார்டில் விசா லாட்சி சௌந்திரராஜன், 4 ஆவது வார்டில் செல்வி, சோமையம்பா ளையம் 6 வார்டில் லட்சுமி ஆகியோ ரும், அன்னூர் கஞ்சப்பள்ளியில் 7 ஆவது வார்டில் யுவராஜ், ஒட்டர் பாளையம் 3 ஆவது வார்டில் ஆர்.பாக்கியலட்சுமி ஆகியோரும், சுல் தான்பேட்டையில் வாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வேணுதங்கமணி, எம்.தனலட் சுமி, ப.மரகதம் மற்றும் பலநாள் (எ) பரிமளா ரங்கநாதன் ஆகியோ ரும் மேட்டுபாளையம் மூடுது றையில் கோபால் ஆகியோரும் வெற் றிபெற்றனர். திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்கள் அனைவ ருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித் துள்ளனர். 

ஈரோடு

தமிழக ஊராக உள்ளாட்சி தேர் தலில் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள் ளனர். ஈரோடு மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பத விக்கு போட்டியிட்ட அந்தியூர் 6 ஆவது வார்டில் சிபிஎம் வேட்பாளர் கு.மயில்சாமி,  தாளவாடி 7 ஆவது வார்டில் மா.மாதேஷ். பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்ட கோபி அளுக்குளி  4 ஆவது வார்டில் எஸ்.லதா, பவானி பெரியபுலியூர் 9 ஆவது வார்டில் பாலமுருகன், பவானி புன்னம் 8 ஆவது வார்டில் என்.சின்னசாமி, திங்களூர் 7 ஆவது வார்டில் கெஞ்சப்பன், கடம்பூர் மலை குத்தியாலத்தூர் 11 ஆவது வார்டில் பெ.தங்கவேல், மொடக்குறிச்சி - கொடுமுடி கொளாநல்லி 3 ஆவது வார்டில் வி.மைதிலி, மொடக்கு றிச்சி-கொடுமுடி எழுமாத்தூர் 7 ஆவது வார்டில் டி.தங்கவேல், சத்தியமங்கலம் இண்டியம்பாளை யம் 3 ஆவது வார்டில் பி.ராஜா மணி, அந்தியூர் மைக்கெல்பாளை யம் 11 ஆவது வார்டில் எம்.பழனி யம்மாள்,  அந்தியூர் வேம்பத்தி 7  ஆவது வார்டில் முருகன், பெருந் துறை குட்டப்பாளையம் 7 ஆவது வார்டில் பழனிசாமி,  பெருந்துறை கம்புளியம்பட்டி 1வது வார்டில் பழனி சாமி, பெருந்துறை மூங்கில்பாளை யம் 1 ஆவது வார்டில் மைதிலி, ஈரோடு பேரோடு 6 ஆவது வார்டில் எஸ்.கோபால், பெருந்துறை திரு வாச்சி 1 ஆவது வார்டில் பழனிச் சாமி, மொடக்குறிச்சி - கொடுமுடி விளக்கேத்தி 7 ஆவது வார்டில் தாமோதரன், பெருந்துறை கம்புளி யம்பட்டி 2 ஆவது வார்டில் ஜெயந்தி, ஈரோடு கூரபாளை யம் 1 ஆவது வார்டில் மேரி, அந்தி யூர் ஒட்டபாளையம்  7 ஆவது வார் டில் ஆர்.சரஸ்வதி, அந்தியூர் மூங்கில் பட்டி 1 ஆவது வார்டில் எம்.கே.சண்மு கசுந்திரம் ஆகியோர் வெற்றி பெற் றுள்ளனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தனித்துப் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் மாவட்ட ஊராட்சி யில் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியத்தில் 2 இடங்களிலும்,கிராம ஊராட்சியில் 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி  1 வது வார்டில் எம்.எம்.அனிபா மாஸ்டர், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் 7 வது வார்டில் ஜிஜி ஜோண், 8 வது வார்டில் டி.கே.யசோதா, சேரங்கோடு கிராம ஊராட்சி 1 வது வார்டில் சுஜிதா, 3 வது வார்டில் கிரிஜா ராமதாஸ், நெலாகோட்டை கிராம ஊராட்சி 7 வது வார்டில் ஜிசா, 8 வது வார்டில் விஜி, 9 வது வார்டில் சுந்தரன் , கோடநாடு  கிராம ஊராட்சி 9 வது வார்டில் புனிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் கோடநாடு  9ஆவது வார்டில் புனிதா போட்டியின்றி வெற்றி பெற்றார்.