what-they-told

img

நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை தடுக்கும் தடுப்பூசியே தேவை!

ஜெனீவா,ஜன.13- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.இதனை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. மக்களுக்கு 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன பல நாடுகள் மூன்றாவது தவணை தடுப்பூசியை, பூஸ்டர் தடுப்பூசி என செலுத்தி வருகின்றன. இந்தியா விலும் முதியோர்கள், இணை நோய் உள்ள வர்களுக்கு முதற்கட்டமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ்களை தடுக்க  4 ஆவது தவணை தடுப்பூசியை அறிமுகம் செய்வது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் அனைத்து நாடுகளும் ஏற்கனவே 2 தவணை  செலுத்திய தடுப்பூசியையே மூன்றாவது தவணையாகவும் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசிகளையே மீண்டும் பயன்படுத்துவது  பலன் தராது என்று உலக சுகாதார மையம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து தடுப்பூசிகளின் பயன்பாடு குறித்து ஆராயும் உலக சுகாதார மையத்தின் நிபுணர்கள் கூறுகையில், ஏற்கனவே செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியையே பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தும் திட்டம் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக பலன் தராது. முதற்கட்ட தரவுகள் தற்போது பயனில் உள்ள தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படவில்லை என கூறுகின்றன. இதனால் தான் ஒமைக்ரான் காட்டுத்தீயை போல பரவி வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமைக்ரான் பாதிக்கிறது.   நோய் தொற்றுக்கு ஆளானவர்களை தீவிர பாதிப்பு, இறப்பில் இருந்து காப்பாற்று வது மட்டும் இல்லாமல், நோய் தொற்று  முதலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவ ருக்கு பரவுவதையே தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தேவை. அவற்றை தான் நாம் உருவாக்க வேண்டும். அதுபோன்ற தடுப்பூசிகள் நமக்கு கிடைக்கும் வரை,  தற்போதைய கொரோனா தடுப்பூசிகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும், அவை ஒமைக்ரான் மற்றும் எதிர் கால மாறுபாடுகளுக்கு எதிராக உலக சுகாதார மையம் பரிந்துரைத்த அளவி லான பாதுகாப்பைத் தொடர்ந்து வழங்கு வதை உறுதிசெய்ய வேண்டும் என்று  தெரிவித்துள்ளனர்.

;