சங் பரிவாரத்தைச் சேர்ந்தவங்க சுதந்திரப் போராட் டத்திலே ஏன் கலந்துக்கலைன்னு கேக்கறீங்க. சொல்றோம், கேட்டுக்குங்க. எங்களுக்குப் பிரிட் டிஷ்காரங்க மேலே கோபம். முஸ்லிம் மன்னர்களை ஜெயிச் சுட்டு இந்தியாவுக்குள்ள வந்தாங்க, சரி... அப்புறம் ஏன் அவங்களை நாட்டைவிட்டுத் துரத்திவிடலை? “முஸ்லிம்-முக்த்” பாரதத்தை அவங்களே உருவாக்கியிருந்தா எங்க ளுக்கு வேலை மிச்சமாயிருக்குமே? ரெண்டாவது, அவங்களுக்கு விசுவாசமா இருந்த எங்ககிட்ட நாட்டைக் குடுக்காம, காந்தி-நேரு வகையறா கிட்ட ஏன் குடுத்திட்டுப் போனாங்க? காந்தியோட பேச்சு, பாட்டு, பஜனை எதையுமே எங்களாலே தாங்க முடியலை. ஈஸ்வர அல்லா தேரே நாம்னு அல்லாவை ஈஸ்வரனோட சேர்த்தார் பாருங்க.. அதனாலே அவரை சுதந்திரம் அடைஞ்சவுடனே சொர்க்கத்திற்கு அனுப்பி வச்சோம். வேற எங்கயாவது போய் அல்லாவைப் பத்திப் பாடட்டு மே? ஜனநாயகம், சோசலிசம்னு நேரு எதையாவது பெனாத்திக்கிட்டே இருந்தாரு.. எங்களுக்கு ஜனநாயகம், சோசலிசம்லாம் சுத்தமாப் பிடிக்காதுங்கறது உங்களுக் குத் தெரியும். ஆனா நேரு மக்கள் தலைவரா இருந்ததி னாலே எங்களாலே அவரை ஒண்ணும் செய்ய முடி யலை. அவர் எங்களை வளரவே விடலை. அந்தக் கோபம் எங்களுக்கு இன்னிவரைக்கும் அவர் மேலே இருக்கு.
சுதந்திரத்துக்குப் போராடியவர்னு வல்லபாய் படேல் மேலேயும் எங்களுக்குக் கோபம்தான். ஆனா சமஸ்தான மன்னர்கள் கிட்டேருந்து நாட்டைப் பிடுங்கி, இந்தியா ஒரே நாடுங்கற நிலைமையைக் கொண்டு வந்தார் பாருங்க.. இப்ப நாங்க சொல்ற “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்”ங்கற அடிப்படையை அவர் உருவாக்கினார்ங்கற தினால எங்களுக்கு அவரைப் பிடிக்கும். அதோட நேரு வுக்கு அவர் எதிர்னு சொல்வாங்க. அதனாலயும் அவரைப் பிடிக்கும். அடுத்து, நாட்டிலே அவசர நிலையைக் கொண்டு வந்த இந்திரா காந்தியை வெளியிலே குறை சொல் வோமே தவிர, உள்ளூர அவங்களுக்கு நன்றி சொல்லிக் கிட்டுத்தான் இருக்கோம். அவங்க மட்டும் எங்களை உள்ளே தள்ளி எங்களுக்கு ஒரு அங்கீகாரத்தைக் குடுக்கலைன்னா அப்பவே நாங்க காணாம போயி ருப்போம். அவங்க கொண்டு வந்த அவசர நிலையைத் தான் நாங்க இப்ப அமல்படுத்திக்கிட்டிருக்கோம். ஆனா அவங்க செஞ்ச தப்பை நாங்க செய்யலை. அதாவது அவசர நிலைன்னு அறிவிக்கலை… அறிவிக்க மாட்டோம். “அவசரநிலை இருக்கு, ஆனா இல்லை”ங்கறமாதிரி நாட்களை ஓட்டிக்கிட்டிருக்கோம்.
கடந்த எட்டு வருஷமா மோடிஜி ஆட்சியிலே ஜனநாய கம்-மனித உரிமைகள்- மாநில உரிமைகள்னு பேசறவங்க, முஸ்லிம்கள் என எல்லாரையும் குளோஸ் பண்ணிக்கிட்டே வரோம்.. கார்ப்பரேட் நண்பர்கள் சொல்றபடி வரி மேலே வரி போட்டு மக்களைக் கதற விடறோம்., சிபிஐ, அமலாக் கத் துறை, தேர்தல் கமிஷன், நீதிமன்றங்கள், ஊடகங்கள் எல்லாத்தையும் வாலைச் சுருட்டிக்கிட்டு ஒரு ஓரமா உட்கா ருங்கன்னு சொல்லிட்டோம்., பணமதிப்பிழப்பிலே தொடங்கி ஏராளமான துல்லியத் தாக்குதல்களை சாதாரண மக்கள்மேலே அன்றாடம் தொடுத்துக்கிட்டேதான் இருக் கோம்.. மக்கள்தான் பழசையெல்லாம் மறந்துடறாங்க ளே? அப்புறம் எங்களுக்கு என்ன கவலை? எங்களுக்கி ருக்கிற ஒரே கவலை, எங்களோட அடுத்த தாக்குதல் என்னங்கறது மட்டும்தான். நரேந்திர மோடி, அமித் ஷா, ஸ்மிருதி இரானி, கங்கனா ரணாவத், நூபுர் சர்மா, அண் ணாமலை மாதிரி பல பேர்களை உருவாக்கிக்கிட்டே இருப்போம்.. எதிர்க்கட்சியினரைத் திணறடிப்போம்..
வரலாற்றை எங்க கோணத்திலே மாத்தி எழுதிக்கிட் டிருக்கோம். ராமர், அனுமான், முனிவர்கள் என எல்லாரை யும்.. புராணம், ஜோதிடம், கோவில்கள் என எல்லாத்தை யும் அதிலே கொண்டு வருவோம். முன்னோர்கள் முட்டாள் கள் அல்ல. தேர்தல் தேதிகள், விளையாட்டுப் போட்டிகள் எல்லாத்தையும் ஜோதிடர்களைக் கேட்டுட்டுத்தான் முடிவு செய்வோம்.. இன்னொரு பக்கம் டிஜிட்டல் இந்தியா பத்தியும் பேசுவோம்.. மக்கள் குழம்பிப் போவாங்க. அதானே எங்களுக்கு வேணும்? ஷாகான்னு சொல்லுவோம்.. யோகான்னு சொல்லு வோம்.. ஆனா அங்கே நடப்பதென்னவோ இந்துத்துவா சித்தாந்தப் பயிற்சிதான். அதைக் குடுத்திட்டா மக்கள் நாங்க சொல்றதையெல்லாம் கேப்பாங்க.. சுருக்கமாச் சொன்னா மக்களை சுயமா யோசிக்க விடக் கூடாது. எதிர்க் கட்சிகள் கிட்டயும் ஊழல், முறைகேடுகள் இருக்கற வரை.. ஒற்றுமை இல்லாதவரை எங்க பாடு ஜாலிதான். அதைச் சொல்லியே எங்க ஆட்சியைத் தொடர்வோம்..
சரி.. இன்னிக்கு இது போதும். முடிச்சுக்குவோம்.
பாரத் மாதா கீ ஜெய்..!
-ராஜகுரு