what-they-told

img

தொழிலாளர்கள் “வாழ்க்கையில் விளக்கேற்றும்” கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபத் திருநாள்  டிசம்பர் 6-ஆம் தேதி  கொண்டாடப்பட உள்ளது. இது மதம் சார்ந்த நிகழ்வாகவே பார்க்கப்படு கிறது. கார்த்திகை தீபத்தையொட்டி விளக்குகள் தயாரிக்கும் பணி வேக மாக நடந்துவருகிறது. குறிப்பாக  களிமண்ணால் ஆன விளக்கு களையே 90 சதவீதம் மக்கள் பயன்  படுத்துகின்றனர். இதன் மூலம்  விளக்குகள் தயாரிக்கும் தொழிலா ளர்கள் வாழ்க்கையில் மக்கள் ஒளி யேற்றுகிறார்கள். இதன் மூலம் இந்தத் தொழிலை நம்பியுள்ள குடும்பங்கள் குறைந்தது இருபது நாட்களுக்காவது மகிழ்ச்சியாக இருப்பார்கள். களிமண் கிடைப்பதில் கஷ்டம் உள்ளது. நீர் நிலைகள் குப்பைக் கிடங்  காக மாறிவிட்ட சூழலில் மண்ணின் தரம் கெட்டுவிட்டது என்ற பிரச்சனை களை தொழிலாளர்களும் உற்பத்தி யாளர்களும் கூறினாலும் கொரோனா காலங்களில் பாதிக்கப்பட்டிருந்த நாங்கள் இந்தாண்டு சற்று மகிழ்ச்சி யாக உள்ளோம் என்கின்றனர். கார்த்திகை தீப விளக்கு தயாரிப்பா ளர்கள் தங்களது கலை வண்ணத்தை யும், பாரம்பரியத்தையும் நிலை நாட்டி யுள்ளனர் மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த மண் விளக்கு தயாரிப்பாள ரான ஏ.மூக்கம்மாள் கூறுகையில், 30 ஆண்டுகளாக பாரம்பரியமாக மண்  விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். “நாங்கள் நாள் ஒன்றுக்கு 1,000 விளக்குகள் தயாரிக்கிறோம். மதுரை  நகரம் மட்டுமன்றி மற்றும் மாவட்டத் தின் உசிலம்பட்டி பகுதியில் உள்ள பல கடைகளுக்கு வழங்குகிறோம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக் கும் குறிப்பிட்ட அளவு விளக்குகளை ஆண்டுதோறும் வழங்குகிறோம். கொரோனா தொற்றுப் பரவல் கார ணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தாண்டு விற்பனை எதிர்பார்த்த அளவு இருக்கும் என்கி றார். இருப்பினும் களிமண்ணை கொள்முதல் செய்வது மிகக் கடினமாக  உள்ளது.

மழை காரணமாக, நீர்நிலை களில் வரை தண்ணீர் நிரம்பியுள்ளது மற்றும் களி மண் எடுப்பது கடினமாக உள்ளது. நீர் நிலைகள் குப்பைக் கிடங்காக மாறிவிட்டதால் மண்ணின் தரமும் குறைந்து விட்டது என்கிறார். வாடிக்கையாளர்களை கவரும்  வகையில், மண் விளக்குகளுக்கு பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்க ளில் தங்க நிற பார்டர்களுடன் வண்  ணம் தீட்டுகின்றனர். இருப்பினும்  இந்தத் தொழிலும் இயந்திரமயத்திற்கு வந்துவிட்டது. வாடிக்கையாளர்கள் கையால் தயாரிக்கப்படும் விளக்கு களையும், இயந்திரத்தில் உரு வாக்கப்பட்ட விளக்குகளையும் வாங்குகிறார்கள்.  இது குறித்து ரோஜா என்பவர் கூறுகையில், எரி பொருள் விலை  உயர்ந்துவிட்டது. இந்தத் தொழிலில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தொழிலாளர் களுக்கான சம்பளம் இரண்டு மடங்காகிவிட்டது. பாரம்பரியத் தொழிலைத் தொடர தொழிலாளர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டியுள்ளது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ கார்த்திகை தீபத் திருநாள் நெருங்கி வரும் நிலையில், சூரியனுக்குத் தான் நன்றி தெரிவிக்கவேண்டும். வெயில் அடித்தால் தான் எங்களுக்கு நல்லது. கொரோனா காலத்திற்குப் பிறகு எங்கள் தொழில் புத்துயிர் பெறுவது போல் தோன்றுகிறது. மக்க ளின் தேவையை பூர்த்தி செய்ய வெயில் அடிக்கும் நாட்களைப் பயன்படுத்தி கூடுதல் விளக்குகளை தயாரிக்கவேண்டும் என்றார். சென்னையில் இருந்து சமீபத்தில்  குடியேறிய பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த என்.ஹேமலதா, கூறுகை யில், கார்த்திக்கை தீப விளக்குகள் மது ரையில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் என்றாலும் இது மரபு சார்ந்த விழா என்பதால் இந்த விலை ஒன்றும் அதிக மில்லை என்றார். இதேபோல் மானாமதுரை, பரமக்குடி பகுதிகளிலும் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.

கோயம்புத்தூர் சங்கனூரில் புகழேந்தி கிரைண்டர் ஸ்டோன்வொர்க்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் பி.மகேஸ்வரன் கூறுகை யில், பாறைகளிலிருந்து கற்கள் உடைத்து வரப்படும். இந்த கற்கள்  நாமக்கல், கரூர் பகுதியில் கிடைக்கி றது. பாறைகளிலிருந்து உடைத்து எடுத்து வரப்படும் கற்கள் சிறு சிறு  துண்டுகளாக வட்ட வடிவில் வெட்டப்  படும். பின்னர் விளக்கு செதுக்கப் படும். என்னிடம் இருந்து பெற்றுச் செல்லும் வேலைப்பாடுகள் நிரம்பிய கல் சிற்பங்கள் தேவாலயங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளில் அலங்காரப் பொருட்களாகப் பயன்படுத்தப்படு கின்றன. கேரளா, கர்நாடகம் மாநி லங்கள் தவிர சென்னை,

கும்பகோ ணம், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவருக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். அனைத்துப் பணிகளையும் இயந்தி ரத்தில் பூர்த்தி செய்துவிட முடியாது. கைவேலைப்பாடும் முக்கியமானது என்றார் மகேஸ்வரன். மேலும் அவர் கூறுகையில், கார்த் திகை தீப விளக்குகள் களிமண், வெண்கலத்தில் இருந்தாலும் கற்களால் செதுக்கப்படும் விளக்கு களுக்கு இன்றைக்கும் வரவேற்பு உள்ளது. “எனது தந்தை 15 ஆண்டு களுக்கு முன்பு கேரளாவுக்குச் சென்ற போது கற்களால் உருவாக்கப்படும் விளக்குகளைக் பார்த்துவந்தார்.” அதைத் தொடர்ந்தே நாங்களும் கற்களால் ஆன விளக்குகளைத் தயாரிக்கிறோம். ஐந்தடி உயர விளக்கு தயாரிக்க எட்டு மணி நேரம் ஆகும். இதன் விலை ரூ.4,500 என்றார். இங்கு பணியாற்றும் கோயம்புத் தூர் சங்கனூர் பகுதியைச் சேர்ந்த குரு சாமி என்பவர் கல்லால் செதுக்கப்பட்ட கார்த்திகை விளக்குகளைத் தயாரிக்கி றார். கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள தருணத்தில் இதை அதிகம் பேர்  வாங்கிச் செல்வர் என்கிறார். விளக்கு களைச் செதுக்குவதற்கு குருசாமி மூன்று அளவுகளைக் கொண்ட உளிகளைப் பயன்படுத்துகிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்தும் கைகளாலேயே செதுக்கப்பட்டன. தற்போது சில வேலைகளில் இயந்தி ரப் பயன்பாடு உள்ளது. ஒரு சிலையின்  கண்கள், மூக்கை இயந்திரத்தால் துல்லியமாக செதுக்க முடியாது. அதற்கு பொறுமையும் கலைநயமும் தேவை. கண்கள், மூக்கை கைகளி னால் மட்டுமே துல்லியமாக உரு வாக்க முடியும் என்றார்.

;