what-they-told

img

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: கடலூர் சிறுமிக்கு ரூ.1 லட்சம்

சென்னை,பிப்.24- பெண் குழந்தைகள் பாது காப்பு தினத்தையொட்டி 14 பெண்  குழந்தைகள் பெயரில் தலா ரூ.25  ஆயிரம் டெபாசிட் செய்யப் பட்டதற்கான பத்திரங்களை முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி  திங்களன்று(பிப்.24) வழங்கி னார். இது தொடர்பாக தமிழக அரசு  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். அந்த அறி விப்பிற்கிணங்க இந்த ஆண்டிற் கான பெண் குழந்தை முன்னேற்  றத்திற்கான மாநில விருது, போஷன் அபியான் திட்டம், நெகிழி பயன்பாட்டைத் தவிர்த்  தல், வாக்களிக்க மக்களை ஊக்கு வித்தல், கண் தானம் போன்ற  பல்வேறு விழிப்புணர்வு பிரச்சா ரங்களை மேற்கொண்டதற்காக, கடலூர் மாவட்டம், மாலுமியர் பேட்டையைச் சார்ந்த 9 வயது  சிறுமி பவதாரணிக்கு முதலமைச் சர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசின் விருதிற்கான 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு பத்திரமும் வழங்கி பாராட்டினார்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புதிதாக இணைந்துள்ள 14  பெண் குழந்தைகளுக்கு, தமிழ்  நாடு அரசின் சார்பில் அக்குழந்தை களின் பெயரில் தலா ரூ.25 ஆயி ரம் வைப்பீட்டுத் தொகை செய் யப்பட்டதற்கான பத்திரங்களை முதல்வர் வழங்கினார். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்து, தற்போது 18 வயது பூர்த்தியடைந்த 7 பெண்களுக்கு முதிர்வுத் தொகைக்கான காசோ லைகளையும் எடப்பாடி  வழங்கி னார். நிகழ்ச்சியில் துணை முதல மைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் சரோஜா, தலை மைச் செயலாளர் சண்முகம், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை செயலாளர் மதுமதி, சமூகநல ஆணையர் ஆபி ரகாம், சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் லால்வேனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு

மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பள்ளிகள் மற்றும் அரசு அலு வலகங்களில், பெண் குழந்தை கள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி எடுக்க, அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி, பெண்  குழந்தைகள் பாதுகாப்பை வலி யுறுத்தும் வகையிலான உறுதி மொழி தொடர்பான விவரத்தை, பள்ளிக் கல்வித் துறை அனைத்  துப் பள்ளிகளுக்கும் அனுப்பி யுள்ளது.
 

;