what-they-told

img

தனியார் துறையில் இடஒதுக்கீடு முன்மாதிரியாக சட்டம் இயற்றுக

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, ஜன. 21- மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு  வழங்க  தமிழக அரசு முன்மாதிரி யாக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சி ராணி, பொதுச் செயலாளர் எஸ்.  நம்புராஜன் ஆகியோர் வெளியிட்டி ருக்கும் அறிக்கை வருமாறு:- அரசுத்துறைகளில் சட்டப்படி யான 4 விழுக்காடு பணி வாய்ப்பு களை முழுமையாக வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டி இருந்தா லும்; தனியார்மயமாக்குதல், நிரந்தரப்பணிகளில்  தொகுப்பூதி யம்,  காண்ட்ராக்ட் மற்றும் ஓய்வு  பெற்றவர்களை பணியமர்த்து வது உள்ளிட்ட காரணங்களால்   இடஒதுக்கீடு முறை முழுமை யாக அமலாகாமல் மாற்றுத்திற னாளிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, படித்து திறன்படைத்த 1,05,000-க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்து காத்தி ருக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதியாமல் வேலைக்காக சுமார் 5 லட்சத்  துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளி இளைஞர்கள் காத்திருக்கி றார்கள்.

மாற்றுத்திறனாளிகளுடைய கண்ணியமான வாழ்க்கைக்கும், சுயமரியாதைக்கும் வேலை வாய்ப்பு மிக அவசியமான ஒன்று என ஐக்கிய நாடுகள் சபையின் 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான கன்வென் ஷன் விதிக்கிறது. ஐ.நா. கன்வென்ஷன் பிரிவு  27(எச்), தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு வழங்க அரசாங் கங்கள் கொள்கை முடிவுகள் மூலம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலி யுறுத்துகிறது. ஏழாவது நாடாக  இந்த விதிகளை கையெழுத் திட்டு ஏற்று, இந்திய அரசு அங்கீ கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புக்கு, மத்திய அரசு சட்ட  ரீதியான நடவடிக்கைக்கு முயற்சிக்கவில்லை. சமூக நீதி காப்பதில் தமிழகம்  எப்போதும் முன்னணியில் இருந்து வரும் மாநிலம் என்ற  அடிப்படையில், “மாற்றுத்திற னாளிகளுக்கு அரசுத்துறைகளில் உள்ளது போன்று தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு இட  ஒதுக்கீடு” வழங்க, மற்ற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக, தமி ழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

;