what-they-told

img

மூளைக்கொரு வரைபடம் 

 ஹைதராபாத்திலுள்ள சர்வ தேசிய தகவல் தொழில் நுட்பக் கழக ((IIIT-H) ஆய்வாளர்கள் முதன் முதலாக இந்திய மூளை வரைபடத்தை(Indian Brain Atlas) தயாரித்துள்ளார்கள்.இந்தியர்களின் மூளை சராசரியாக உயரத்திலும் அகலத்திலும் கன அளவிலும் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களின் மூளையைவிட சிறியதாக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.சக அறிவியலாளர்களால் சீராய்வு செய்யப்படும் நியூராலாஜி இந்தியா(Neurology India) இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை கக்கேசீய(Caucasian) மனித மூளையின் வரைபடமே தரப்படுத்தும் அளவாக இருந்தது.இந்தியர்களின் மூளை, அளவில் சிறியதாக இருப்பதால் இதனுடன் ஒப்பிடுவது தவறான முடிவுகளுக்கு இட்டு செல்லும் என்கிறார் விஷுவல் இன்பர்மேஷன் டெக்னாலஜியை சேர்ந்தவரும் இந்த ஆய்வில் பங்கெடுத்தவருமான ஜெயந்தி சிவசாமி. சீன மற்றும் கொரிய மக்கள் மூளைகளின் வரைபடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இதைப் போல் இந்திய மக்களின் மூளை வரைபடம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.அதை ஏற்படுத்தும் முதல் முயற்சியான ஐ ஐ ஐ டி(ஹை) ஆய்வில் ஆண் பெண் சமமான எண்ணிக்கைகளில் ஐம்பது பேர் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிவுகளில் ஸ்கேன் இயந்திரங்களால் வரும் வேறுபாட்டை தவிர்க்க மூன்று மருத்துவ மனைகளில் மூன்று வெவ்வேறு ஸ்கேன் இயந்திரங்களில் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்த முன்மாதிரி சோதனையில் கிடைத்த வெற்றியால் உந்தப்பட்டு சோதனைகளில் பங்கெடுக்க சுய விருப்பம் கொண்ட நூறுபேரின் பங்கெடுப்போடு வரைபடம் தயாரிக்கபப்ட்டது. ஒருவருக்கு வயதாகும்போது மூளையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.அவற்றில் குறிப்பிடத்தக்கது பல பாகங்கள் சுருங்குவது.இது அட்ரோபி(atrophy) எனப்படும். இதனோடு தொடர்புடைய மறதி அல்லது அல்ஸெய்மெர்ஸ்(Alzheimers) எனப்படும் வியாதியைக் கண்டறிவதற்கு இந்த ஆய்வு பயன்படும். (நிருபா வட்யம் டைம்ஸ் ஆப் இந்தியா அக்டோபர் 29 தேதியிட்ட கட்டுரையிலிருந்து)