what-they-told

img

இரட்டைத் தலையுடன் பிறந்த கன்றுக் குட்டி

அரூர், செப். 23- தருமபுரி மாவட்டம், அரூர் அருகே  உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவீந்தர். இவரது பண்ணையில் 2 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு பசுமாடு  ஆண் கன்று ஒன்றை ஈன்றது. அது சாதா ரண கன்று குட்டி போல் இல்லாமல் இரண்டு தலைகளுடன் பிறந்தது.  இந்த கன்று குட்டி இரண்டு வாய்,  இரண்டு மூக்கு, நான்கு கண்களுடன் பிறந்துள்ளது. இந்த தகவல் அருகே யுள்ள கிராம மக்களுக்கு காட்டு தீ போல் பரவியது. இதனை யடுத்து பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக  சென்று பார்த்து வருகின்றனர்.