புதுதில்லி, ஏப்.28- கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இவை செப்டம்பர் மாதம் தான் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமரப்பிக்க யுஜிசி இரண்டு குழுக்களை அமைத்திருந்தது.
இந்தக்குழுக்கள் தங்களது அறிக்கைகளை யுஜிசி செயலரிடம் சமர்ப்பித்து விட்டது. இது குறித்து செயலர் ஜெயின் கூறுகையில், “யுஜிசி நியமித்த இரண்டு குழுக்கள் சமர்ப்பித்த பரிந்துரைகளின் அடிப்படையில் யுஜிசி வழிகாட்டுதல்களை வெளியிடும் இது குறித்து யுஜிசி உறுப்பினர்கள் திங்கள்கிழமை விவாதித்தனர்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பல்கலைக்கழகங்கள் எப்போது, எப்படி தேர்வுகளை நடத்தலாம், எப்போது கல்வி அமர்வைத் தொடங்கலாம் என்பதை தீர்மானிப்ப தில் அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கப்படும். அது உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து. சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக கொரோனா தொற்று சதவீதம் எவ்வாறு உள்ளது என்பதைப் பொறுத்தும் அமையும் என்றும் கூறினார்.