what-they-told

img

குரூப்-2 தேர்விலும் முறைகேடா?

சென்னை, ஜன. 29- 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தக வல்கள் பரவி வருகின்றன. அந்த தேர்விலும் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழு திய 37 பேர் முதல் 100 இடத்துக்குள் வந்த தாக தெரிய வந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் மிகப்  பெரிய அளவில் முறைகேடு நடந்தது வெளிச்  சத்துக்கு வந்துள்ளது. பணம் கொடுத்து முறை கேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களின் தேர்வு ரத்து  செய்யப்பட்டதோடு அவர்கள் வாழ்நாள் முழு வதும் அரசுத் தேர்வு எழுதவும் தடை விதிக்  கப்பட்டுள்ளது. 

இதுவரை நடத்திய விசாரணையில் சென்  னையைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்  குமார் பல ஆண்டுகளாக இந்த முறை கேட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள் ளது. அவர் கைதானால் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில பயிற்சி மையங்கள் ஜெயக்குமார் உதவி யுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சிபிசி ஐடி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரி களை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவ லகத்துக்கு அழைத்து விசாரித்தார்கள். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த விசாரணை யின்போது முறைகேடு தொடர்பான பல்வேறு  சந்தேகங்களுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்டனர். அப்போது டி.என்.பி.எஸ்.சி. அதி காரிகள் தங்களிடம் இருந்த சில ஆதாரங்  களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இடைத்தரகர்கள் அதிகாரிகள் துணையில்லா மல் இந்த முறைகேட்டை செய்திருக்க முடி யாது என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள ஓம்காந்தனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்த போது சில உயர் அதிகாரிகளின் போன் நம்பர்க ளும், அந்த எண்களுடன் பலமுறை தொடர்பு  கொண்டு பேசியதும் தெரிய வந்தது. எனவே  உயர் அதிகாரிகளும் விசாரணை வளையத்  துக்குள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் 2017ஆம் ஆண்டு உயர்  பதவிகளுக்கான குரூப்-2 தேர்விலும் முறை கேடு நடந்திருப்பதாக தகவல்கள் பரவி வரு கின்றன. அந்த தேர்விலும் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடத்துக்குள் வந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் அரசின்  பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள். 2017-ல் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில்  தேர்வு எழுதியவர்களின் பெயர் விபரங்களை யும் காவல்துறையினர் சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

;