what-they-told

img

நரம்பியல் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த மாநாடு

சென்னை,ஜன.13- சென்னை நரம்பியல் அறக்கட்டளை சார்பில் நரம்பியல் மருத்துவத்துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள சென்னையில் நியூரோ அப்டேட் 2020 என்ற  மாநாடு நடைபெற்றது. இதனை குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்வதில் புகழ்பெற்ற நிபுணர் டாக்டர் முகமது ரேலா  தொடங்கிவைத்தார். மாநாட்டுத் தலைவர்  டாக்டர் அர்ஜூன் தாஸ், மாநாட்டுச் செய லாளர் டாக்டர் சி.யு.வேல்முருகன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை நியுரோ டிரஸ்ட் சார்பில் ஆண்டு தோறும் நியுரோ அப்டேட் மாநாடு  நடத்தப்  படுகிறது. நரம்பியல் மருத்துவத்  துறையில் முதுகலை படித்த மாணவர் களுக்கு நரம்பியல் துறையில் அண்மைக்  கால முன்னேற்றங்கள், புதிய சிகிச்சை முறைகள், நவீன மருத்துவ சாதனங்கள் உதவியுடன் வலிகளைத் துல்லியமாக கண்டறிதல் உள்ளிட்டவை குறித்து இம் மாநாட்டில் விளக்கப்பட்டது. இம்மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட சிறப்பு அமர்வுகளில்  அமெரிக்கா, பிரிட்  டன், ஆகிய நாடுகளிலிருந்து வந்த   இந்தத்  துறையின் சிறப்பு நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். நரம்பு  அறிவியல் துறைக்குச் சிறப்பான பங்க ளிப்பை ஆற்றிய அறிவியல் அறிஞர்கள் மாநாட்டில் கவுரவப்படுத்தப்பட்டனர்.

;