what-they-told

img

அயோத்தி விவகாரத்தில் சமரசத் தீர்வு முயற்சி தோல்வி

ஆக.6 முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றமே விசாரிக்கிறது

புதுதில்லி,ஆக.2- அயோத்தி விவகாரத்தில் சமரசத் தீர்வு காண்பதில் மத்தியஸ்த குழு தோல்வியடைந்துவிட்டதாக தெரி வித்துள்ள உச்சநீதிமன்றம், ஆகஸ்ட்  6 ஆம் தேதி முதல் வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள் ளது. அயோத்தி மத்தியஸ்த குழு வியாழனன்று இறுதி அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தது. இதனை வெள்ளியன்று தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அறிக்கையில், அயோத்தி விவகாரத்தில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என  குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அயோத்தி  சமரசக் குழு தோல்வியடைந்துள்ளதாக உச்சநீதிமன்றம் கருதுகிறது. எனவே, உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அயோத்தி மேல்முறை யீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்கத் தொடங்கும் என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியது. சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அக்காரா மற்றும் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்புக்கும் 2.77 ஏக்கர் நிலத்தை பகிர்ந்து அளிக்க, 2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான 14 மேல்முறையீட்டு மனுக்கள் விசாரிக்கப்பட உள்ளன. முதலில் நிர்மோகி அக்காரா மற்றும் ராம் லல்லா தரப்பின் மேல்முறை யீட்டு மனுக்களின் வாதங்கள் விசாரிக்கப்படும் என்று அமர்வு தெரி வித்துள்ளது.

;