what-they-told

img

பிளாஸ்மா தானம் வழங்கியோருக்கு பாராட்டு

சென்னை, ஆக.7- சென்னை பெரும்பாக்கத்  தில் உள்ள  குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவ மனையில்  கோவிட் - 19 தொற்  றால்  பாதிக்கப்பட்ட 17  நோயாளிகளுக்கு பிளாஸ்மா தானம் வழங்கி யவர்களை அம்மருத்துவ மனை  கவுரவித்துள்ளது. இந்த நன்கொடையா ளர்களில் இம்மருத்துவ மனையின் சுகாதார பணி யாளர்களும் ஊழியர்களும் அடங்குவர். அவர்கள்  தாமாக முன் வந்து பிளாஸ்மா நன்கொடை அளித்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக அவர்களை பாராட்டிய மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி யும் டாக்டருமான அலொக் குல்லர் கூறினார். பிளாஸ்மா தானம் அளித் தவர்கள் அனைவரும்  30 வயது முதல் 50 வயது உடைய ஆண்கள் ஆவர்.  இந்த பிளாஸ்மா சிகிச்சையா னது 20 வயது முதல் 90 வய துள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்மாவை தானமாக பெற்றவர்களும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.