சென்னை, ஆக.18- காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளா கத்தில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சாதனை செய்து வருகிறது. இம் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக நாள் தோறும் 1000 முதல் 1500 வரையிலான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் 80 சதவிகிதம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கபடுவதுடன் மற்றவர்க ளுக்கு குறைந்த கட்டண சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இம்மருத்துவமனை நவீன தொழில் நுட்பத்தில் வடிவமக்கப்பட்ட மருத்துவ கருவிகள் சாதனங்களை கொண்டதாக அமைந்துள்ளது. இம்மருத்துவமனைக்கு வந்த வாந்தி நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட 45 வயது மதிக்கத்தக்க நோயாளியை பரிசோதித்த மருத்துவர் என்.ஏ. ராஜேஸ் கூறுகையில், “அந்த நபர் ‘அக்லேசியா கார்டியா’ என்ற உணவுக்குழல் வால்வு இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு ள்ளார். இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடன் அவை உணவுக் குழல் வழியாக இரைப்பைக்கு செல்லா மல் உடனே வாந்தியாக வெளியே வந்து விடும். பிறகு நெஞ்சுவலி, வயிற்றுவலி ஏற்படும். பாதிக்கப்பட்ட நபர் உணவு, தண்ணீர் சாப்பிடும்போது உணவுக் குழாய் விரிவடைந்து உள்ளே செல்லும் அப்போது பாதிக்கப்பட்ட வால்வு அதை தடைசெய்ய வலி ஏற்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு பெர் ஓரல் எண்டோஸ்கோபிக் மயோடமி என்ற சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த நபருக்கு வாய் மூலம் உணவுக் குழாய் வழியாக அறுவை சிகிச்சை கருவியை செலுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். அந்த நபர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். இத்தகைய அறுவை சிகிச்சை நாட்டில் சி.எம்.சி.மருத்துவ மனை, ஜெம் மருத்துவமனை, குளோபல், மெட் இந்தியா, பிஎஸ்ஜி ஆகிய மருத்துவமனை களில் மட்டுமே செய்யப்பட்டு ள்ளது. அதிலும் அந்த மருத்துவ மனைகளில் ஒரு அறுவை சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டு ள்ளது. எஸ்ஆர்எம் மருத்துவ மனையில் முதன் முதலாக இந்த சிகிச்சை செய்து சாதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை கேஸ்ட்ரோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ. ரத்தினசாமி மேற்பார்வை யில் டாக்டர் ராஜேஷ் இந்த சிகிச்சையை மேற்கொண்டனர்.