சென்னை, ஜூன் 9- தமிழகத்தில் இன்று முதல் (ஜூன் 10) தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அரசு பேருந்து கள் இயங்கவும் அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழகத்தில் புதனன்று முதல் தனியார் பேருந்து கள் இயக்கப்படும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட ங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும்.
குறிப்பிட்ட மண்டலத்துக்குட் பட்ட பகுதிகளில் அரசின் விதி களை பின்பற்றி 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என் றும் தனியார் பேருந்து உரிமையா ளர்கள் சங்க செயலாளர் தர்ம ராஜ் தெரிவித்துள்ளார். பேருந்து கள் இயக்கம் அதிகரிக்கும் நிலை யில் தனிமனித இடைவெளி பாது காக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.