what-they-told

img

படிப்படியாக ஊரடங்கை தளர்வு செய்யலாம்

முதல்வரிடம்  மருத்துவக்குழு பரிந்துரை

சென்னை,மே 14-  ஊரடங்கை முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. படிப்படியாக ஊரடங்கை தளர்வு செய்யலாம் என்று தமிழக முதல் வரிடம் மருத்துவக்குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள் ளது. பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள ஊரடங்கு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.  மே 4 ஆம் தேதியில் இருந்து நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியை மருத்துவக் குழு வியாழனன்று சந்தித்து ஆலோசனை நடத்தியது.  இதன்பின்னர் மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமி ழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள் ளது குறித்து கவலைப்பட வேண்டாம்.  அதி களவில் பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. பணி யிடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உள்பட அனைவரும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

ஊரடங்கை நூறு சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை.  ஊரடங்கை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாக தளர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.  அதனால் ஊரடங்கு தொடரும்.    கொரோனா தொற்று ஒருவருக்கு உறுதி யானால், அவருடன் தொடர்பில் இருந்த வர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.  கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது.  கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.