what-they-told

img

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தலாம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,ஏப்.23- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள மக்கள் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினருக்கு முதல்வர் பழனிசாமி கபசுர குடிநீரை வழங்கினார். கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்க லாம். நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல; எதிர்ப்பு சக்திக்காக மட்டுமே என்று தமிழக அரசு விளக்கியுள்ளது. 

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூர ணப்பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கபசுரக் குடிநீர் அருந்தினால் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று முன்னதாக மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் பொதுமக்க ளுக்கு கடந்த சில நாட்களாக கபசுர குடிநீர் வழங்கி வரு கிறார்கள். பல மருந்து கடைகளில் கபசுர குடிநீர் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.