what-they-told

img

திருநெல்வேலியில் கார்களுக்கு தடை

திருநெல்வேலி, ஏப்.7- மாநகரப்பகுதியில் 144 தடை உத்தரவை கடுமையாக்கும் வகையில் அத்தியாவசிய பணி செய்யும் நபர்களின் 4 சக்கர வாகனங்கள் தவிர மற்ற 4 சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட் டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனைக் கடுமையாக்கும் விதமாக நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறையினர் ஒரு தீர்வை முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சரவணன் கூறுகையில், “திருநெல்வேலி மாநகர பகுதியில் அத்தியாவசிய பணி செய்யும் நபர்களின் 4 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற 4 சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது” என்றார். இரு சக்கர வாகனங்களில் 2 கிலோமீட்டர் சுற்றுளவுக்குள் மட்டுமே காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை செல்லலாம். 1 மணிக்கு பின்னர் எந்த அத்தியாவசிய தேவையில்லாத 2 சக்கர வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. இந்த தடையை மீறுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.