திருநெல்வேலி, டிச.4- நெல்லை- மதுரை நான்கு வழிச் சாலையில் ரெட்டியார்பட்டி அருகே இரண்டு சக்கர வாகனம் மீது கார் மோ தியதில் இரண்டு மருத்துவக் கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் பலியாகினர். நாகர்கோவிலில் இருந்து சனிக் கிழமை தூத்துக்குடி நோக்கி சென்ற கார் ரெட்டியார்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் டயர் வெடித்து எதிரில் வந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரண்டு சக்கர வாக னத்தில் வந்த மருத்துவக் கல்லூரி நான் காம் ஆண்டு படிக்கும் மாணவிகள் காயத்ரி, பிரிட்டோ ஏஞ்சல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காரை ஓட்டி வந்த சண்முக சுந்தரம் என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் உட்பட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.