what-they-told

img

அரசுப் பேருந்தின் முன்சக்கர டயர் வெடித்து பேருந்து சேதம் காயமின்றி தப்பிய பயணிகள்

தஞ்சாவூர், டிச.19 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே அரசுப் பேருந்தின் முன்சக்கர டயர்  வெடித்து பேருந்து சேத மடைந்தது.  பேராவூரணியிலிருந்து வடகாடுவரை செல்லும் 2  ஆம் நம்பர் பேருந்தின் முன் சக்கர டயர் எதிர்பாராத வித மாக திடீரென ஆவணம் சாலை பெட்ரோல் பங்க்  அருகே சென்று கொண்டி ருந்த போது வெடித்தது. டயர் வெடித்த அதிர்வில் பேருந்தின் முன்பகுதி சேத மடைந்து ஓட்டுநர் இருக்கை யும், பயணிகள் அமரும் இருக்கையும் பிளவுபட்டு இர ண்டாகும் நிலை ஏற்பட்டது.  இவ்விபத்தில் நல்வாய்ப் பாக பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேரா வூரணி அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை, தமிழகத்திலேயே முதல் முறையாக நகரப் பேருந்துக் கென கிராமப் பகுதியில் தொடங்கப்பட்ட பணி மனையாகும். தொடங்கப் பட்டு 40 ஆண்டுகளை கடந்த  நிலையிலும், பெரும்பாலான பேருந்துகள் மிக மோசமான நிலையிலேயே உள்ளன.

கும்பகோணம் கோட்டத் தில் மற்ற நகர்ப்பகுதி பணி மனைகளில் புதிதாக வரும் பேருந்துகள்  இயக் கப்பட்டு, அந்த பேருந்துகள் பழுதடையும் நிலையிலேயே பேராவூரணி பணிமனைக்கு அனுப்பப்படுவது கடந்த பல வருடங்களாக வாடிக் கையாக உள்ளது. இதன்  காரணமாக இங்கிருந்து இயக்கப்படும் பெரும்பா லான பேருந்துகள் மோச மான நிலையிலேயே உள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுப் பேருந்து பேராவூரணி நகருக்குள் செல்லும்போது அச்சு முறிந்து நடு சாலையிலேயே நின்று விட்டது. மோசமான சாலை, பழைய இரும்புக் கடைக்கு செல்லும் நிலை யில் உள்ள பேருந்து என்ப தால் அச்சு முறிந்தது. ஆனால்  போக்குவரத்து நிர்வாகம் ஓட்டுநர், நடத்துநர், மெக்கா னிக்கை இடைநீக்கம் செய்து  நடவடிக்கை எடுத்துள்ளது.  எனவே பேருந்து பராம ரிப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, போதிய டயர்களை அரசு  போக்குவரத்து கழக  பணிமனைகளுக்கு வழங்கி,  பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;