what-they-told

img

கொண்ணங்கொட்டை ஏரி தடுப்பு சுவரில் விரிசல்

தருமபுரி, டிச.07-  பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் உள்ள கொண்ணங் கொட்டை ஏரி தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.  தர்மபுரி மாவட்டம், பென்னா கரம் -ஒகேனக்கல் சாலையில் கொண்ணகுட்டை ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 10 ஏக்கர் பரப்பள வில் உள்ளது. இந்த ஏரியை தூர்வார  கடந்த 2017-2018 ஆம் ஆண்டு அதி முக அரசாங்கத்தின் மூலம் தாய்  திட்டத்தில் டெண்டர் விடப்பட்டுள் ளது. இந்த டெண்டர் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான டி .ஆர் அன்ப ழகன் பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை பணிகள் முடிவடையவில்லை. தற்போது திமுக அரசாங்கம் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அவசரகதியில் ஏரியின் வடிகால் மற்றும் மதகு பணி கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவற்றை முழுமையாக முடிக்க வில்லை. இதனால் மதகின் வழியாக தொடர்ந்து நீர் கசிந்து விவசாய விளை நிலங்களில் உள்ள பயிர் களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தற்போது ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதால், ஏரியின் உபரி நீர் வெளியேறும் தடுப்பு சுவர் பகுதியில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்து வருகிறது. இதனால் தடுப்புச்சுவர் இடியும் அபாயம் உள்ளது. இந்த  தடுப்பு சுவர் இடிந்தால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலமும் மற்றும் குடியிருப்பு பகுதிகளும் சேத மடையும் என அப்பகுதி மக்கள் அச் சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விரிசல் ஏற்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, அவற்றின் பின் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணியை செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், டெண்டர் எடுத் தவர்கள் பணியை ஒழுங்காக செய்ய வில்லை. அதனால் தான் இந்த விரி சல் ஏற்பட்டுள்ளது. சரியான அளவு  சிமெண்ட் மற்றும் கலவைகளை கலக்கவில்லை. எனவே டெண்டர் எடுத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தடுப்பு சுவரை பலப்படுத்த வேண்டும்  என்றும் கோரிக்கை விடுத்துள்ள னர்.