what-they-told

img

உதகை மலை ரயில் சேவை மீண்டும் துவக்கம்

மேட்டுப்பாளையம், டிச.22- கனமழையின் காரணமாக ஏற் பட்ட மண்சரிவால் கடந்த தண்டா வளத்தில் இரு மாதங்களாக நிறுத் தப்பட்டிருந்த உதகை மலைரயில் சேவை புதனன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்க துவங்கி யது. உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீல கிரி மலைரயில் கோவை மாவட் டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது. செங்குத்தான மலைகாட்டின் வழியே  ஊர்ந்தபடி கடந்து செல் லும் இம்மலை ரயிலில் பயணித்த படி நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா  பயணிகளும் பெரிதும் ஆர்வம்  காட்டி வருகின்றனர். ஆனால்  ஆண்டுதோறும் மழைக் காலங்க ளில் இதன் இருப்பு பாதையில் ஏற் படும் மண்சரிவுகளால் இதன் போக்குவரத்து தடைபடுவது வழக்கமாகி வருகிறது.  

இந்நிலையில், கடந்த அக்டோ பர் மாதம் 23 ஆம் தேதி அடர்லி மற் றும் ஹில்குரோவ் ரயில் நிலையங் களுக்கு இடையே ஏற்பட்ட பெரிய அளவிலான மண் சரிவுகளால் மலைரயில் சேவை முடங்கியது. கனமழை காரணமாக மேலிருந்து உருண்டு விழுந்த ராட்சத பாறை கள், மரங்கள் மற்றும் மண் சகதி கள் மலைரயில் பயணிக்க வேண் டிய பல்சக்கர இருப்பு பாதையை துண்டித்து சேதப்படுத்தியது. பல இடங்களில் ரயிலின் இருப்பு பாதை மண்ணுக்குள் புதைந்தும் போனது. இதனால் மலைரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதன்பின் ரயில்வே நிர்வா கம் சீரமைப்பு பணிகளை துவங்கி யது. தண்டவாள பாதையில் சரிந்து கிடந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு மரங் கள் மற்றும் சகதிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

ஆனால் சீர மைப்பு பணியின் போது பெய்த தொடர் மழை காரணமாக பணி கள் பாதிக்கப்பட்டதோடு மேலும்  பல இடங்களில் புதிதாக மண் சரிவு கள் ஏற்பட்டபடி இருந்தது. இந் நிலையில் கடந்த பத்து நாட்களுக் கும் மேலாக இப்பகுதியில் மழை  இல்லாத காரணத்தால் சீரமைப்பு  பணிகள் முடுக்கி விடப்பட்டு புதிய இருப்பு பாதைகள் பொருத்தும் பணியும் நிறைவடைந்தது. செப் பனிடப்பட்ட ரயில் பாதையில் மலைரயிலின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.  இதனையடுத்து டிசம்பர் 22 ஆம் தேதி முதல் மலைரயில் போக்குவரத்து துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி கடந்த இரு மாதங்களாக முடங்கி  கிடந்த மலைரயில் சேவை புத னன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்க துவங்கியது. இத னால் மகிழ்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் பலரும் முன் பதிவு  செய்து மலை ரயிலில் உற்சாகத் துடன் பயணம் மேற்கொண்டனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்கள் வரவுள்ள நிலையில் மலைரயில் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது சுற்றுலா  பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

;