எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல் லூரியின் கொரோனா வார்டுக்கு நடிகர் மோகன்லாலின் விஸ்வ சாந்தி அறக்கட் டளை ஒரு தன்னிறைவான ரோபோவை நன்கொடையாக அளித்துள்ளது. கர்மி போட் (KARMI-BOT) என்று அழைக்கப் படும் இந்த ரோபோ 25 கிலோகிராம் வரை சுமந்து செல்லும். இந்த ரோபோவை கேரள ஸ்டார்ட்அப் மிஷன் மேக்கர் கிராமத்தின் அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்கிற நிறு வனம் உருவாக்கியுள்ளது.
செம்பேரி விமல் ஜோதி பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய நைட்டிங்கேல் -19 ரோபோ கண்ணூர் மருத்துவக் கல்லூரி யிலும் பயன்படுத்தப்படுகிறது. மருந்து களும், உணவும் தனிமைப்படுத்தும் வார்டுக்கு கொண்டு செல்லவும் கழிவு களை வெளியே கொண்டுவரவும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுகாதார ஊழியர்கள் நோயாளிகளுடன் நேரடி தொடர்பைத் தவிர்க்கலாம் மற்றும் பிபிஇ கருவிகளின் பயன்பாட்டைக் குறைக் கலாம்.
சுகாதாரத் துறையின் சரிபார்ப்புக்குப் பிறகு, கர்மா-போட் கலாமாசேரி மருத்து வக் கல்லூரி நோயாளிகளுக்காக ஒப்படைக் கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எஸ். சுஹாஸ் தெரிவித்தார். “பிபிஇ கருவி களின் பற்றாக்குறை ஏற்பட்டால் ரோபோ வைத்திருப்பது மிகவும் ஆறுதலளிக்கிறது” என்று அவர் கூறினார். அறக்கட்டளை இயக் குநர்கள் மேஜர் ரவி மற்றும் வினு கிருஷ் ணன் ஆகியோர் சனியன்று மாவட்ட ஆட்சி யரிடம் ரோபோவை வழங்கினர்.