what-they-told

img

பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடமாம்!

மறு விசாரணை  கோரி தாயார்  நீதிமன்றத்தில் முறையீடு

கோயம்புத்தூர், டிச.26-  கோவையில் பாலியல் வன்கொலை செய் யப்பட்ட சிறுமியின் உடலிலிருந்து எடுக்கப் ட்ட மாதிரியில்,  மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. கலப்பு இருப்பதாக தடயவியல் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை  சுட்டிக் காட்டி மறு விசாரணை செய்யக்கோரி உயி ரிழந்த சிறுமியின் தாயார் கோவை நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியைச் சேர்ந்த 1 ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25 ஆம் தேதியன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். அடுத்த நாளான 26 ஆம் தேதி வீட்டின் அருகே துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண் டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனை அறிக் கையில், சிறுமி பலமுறை பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு,   கொலை செய்யப் பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தொடர் போராட்டங்களால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டா முத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ப வரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத் தில் நடைபெற்று வந்தது.  வழக்கின் இறுதி வாதங்கள் கடந்த டிசம்பர் 19ஆம் தேதியன்று முடிவடைந்தது.  டிசம்பர் 27 அன்று  தீர்ப்பு வழங்கப்படும் என போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.  இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் தாயார் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சந்தோஷ்குமாரை தவிர்த்து மற்றொரு ஆண் நபரின் டி.என்.ஏ. கலப்பு உள்ளதாகவும், கடந்த மாதமே இந்த அறிக்கை வந்தபோதும் புலன் விசாரணை அதிகாரி நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுதொ டர்பாக தான் முதலிலிருந்து சொன்னதை போலவே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு வாய்ப்புள்ளதால், மீண்டும் இந்த வழக்கை பெண் அதிகாரி தலை மையில் விசாரணை நடத்த வேண்டும் என்று  குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பு தேதி அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், இந்த மனு மீதான உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

குற்றவாளி தப்பிக்கக்கூடாது

இதற்கிடையே, இதுதொடர்பாக ஊடகவி யலாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பெரி யார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தி னம், தபெதிக பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன், மனித உரிமை ஆர்வலர் ச.பால முருகன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தின் நிர்வாகி வனஜா நடராஜன், வழக்க றிஞர்கள் வெண்மணி, சீலாராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறி யதாவது: இந்த விவகாரத்தில் யாரும் மனு போட வேண்டும் என்பதே இல்லை.  நீதிமன்றமே இதை எடுத்துக்கொண்டு செய்திருக்கலாம். எங்கள் கவனத்திற்கு வந்தவுடன்,  மனு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தின் கவ னத்திற்கு எடுத்துச் செல்லவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறுமி  பாலியல் வன்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட  சந்தோஷ்குமாருடன் மற் றொருவருக்கும் தொடர்பிருப்பது குறித்து மறு விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் மனு அளித்துள்ளார். இதற்கு நாளை உத்தரவிட வாய்ப்புள்ளது. அதேநேரம், சந்தோஷ்குமார் மீதான நாளை தீர்ப்பு தள்ளி வைக்க வேண்டும் என்ப தில்லை. மாறாக, விடுபட்ட மற்றொரு நபரை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்றே மறு விசாரணை கோரி மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. ஆளும் அரசுகள் தலித் மக்க ளுக்கு எதிராகவே உள்ளது. இது அதிகாரி கள் மட்டத்திலும் எதிரொலிக்கிறது. உதார ணமாக மேட்டுப்பாளையம் சுவர் இடிந்து 17  பேர் இறந்த விவகாரத்தில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும் தற்போதுவரை அது நடைபெறவில்லை. ஆகவே, இந்த வழக்கில் குற்றவாளிகள் எந்தவிதத்திலும் தப்பிக்கக்கூடாது என்கிற நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
 

;