what-they-told

img

தானியங்கி கேமராவில் தென்பட்ட புலி தேடுதல் பணியை தீவிரப்படுத்திய வனத்துறை

உதகை, அக்.13- தானியங்கி கேமராவில் புலி தென்பட்ட நிலையில் அவற்றை தேடும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி யுள்ளனர். நீலகிரி மாவட்டம், தேவர்சோலை, மசினகுடிக்குட்பட்ட பகுதிகளில் 4 பேரையும், கால்நடைகளையும் புலி ஒன்று  தாக்கி கொன்றது. இதையடுத்து டி 23 என அடையாளப் படுத்தப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்க முடிவு செய்து வனத் துறையினர் அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும், புலியை பிடிக்கும் பணியில் கடந்த செப்டம்பர் 25 முதல் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இருந்தபோதும் இது வரை புலியை பிடிக்க முடிவில்லை. இவ்வாறு கடந்த 15 நாட்க ளுக்கும் மேலாக புலியை தேடி வரும் நிலையில், செவ்வா யன்று அதிகாலை முதுமலை வனப்பகுதியில் பொருத்தப் பட்டிருந்த தானியங்கி கேமராவில் டி 23 புலியின் படம் பதிவாகி இருந்தது. இதையடுத்து, வனத்துறையினர் முது மலை போஸ்பாரா, கோழிகண்டிப் பகுதியில் புலியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.