சிலியின் புரட்சிக் கவிஞர், உலக மகா கவிஞர்களில் ஒருவர் தோழர் பாப்லோ நெருடா. 1904 ஜூலை 12 அன்று பிறந்தவர். சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தால் அரசியலில் ஈர்க்கப்பட்ட இவர், பிற்காலத்தில் சிலியில் இடதுசாரி அரசு அமைந்த போது அந்நாட்டின் சார்பில் மெக்சிகோ தூதராக செயலாற்றியவர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தின் செனட் சபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். சிலி மீண்டும் சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிய போது அங்கிருந்து நாடு கடத்தப்பட்டும், தலைமறைவாகவும் சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளில் தங்கியிருந்தவர். சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சாதனைகளை பாடலில் வடித்த கவிஞர் பாப்லோ நெருடா, சிலி பாட்டாளி வர்க்கத்தின் துயரங்களை, வேதனைகளை, எழுச்சியை, புரட்சிகர உணர்வுகளை கீதங்களில் வடித்தவர்.
நான் அவர்களுக்கு நடுவே இருந்தேன், மக்கள் செங்கொடிகளை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர் கற்களால் தாக்கிய அவர்களுக்கு நடுவே நான் இருந்தேன், இடி போன்ற அணிவகுப்பில், துயரங்கள் ஓங்கி ஒலித்த பாடல்களில், எப்படிப் படிப்படியாக வென்றார்கள் என்பதைப் பார்த்தபடி, அவர்களது எதிர்ப்பு மட்டுமே சாலையாக; தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள் நொறுங்கிய நட்சத்திரத்தின் துண்டுகளைப் போல, வாயில்லாதவர்களாக, சோபையிழந்தவர்களாக, ஒன்றிணைந்திருந்தார்கள் அமைதியாக ஒற்றுமைக்காக; அவர்கள் நெருப்பாக இருந்தார்கள், அழிக்க முடியாத பாடலாக பூமியில் மனித இனத்தின் மெதுவான மாற்றுப் பாதையாக உருவாகினர் ஆழமாகவும் போராட்டங்களுடனும். எதுவெல்லாம் மிதித்து அழிக்கப்பட்டதோ அவற்றுக்காகப் போராடும் கெளரவமாக, கிளர்ந்தெழுந்தார்கள் ஓர் அமைப்பாக ஒழுங்கோடு சென்று கதவைத் தொட்டு அமர்ந்தார்கள் நடுக் கூடத்தில் தங்கள் கொடிகளுடன்.
பாப்லோ நெருடா