what-they-told

img

பழங்குடி மக்களின் போராளி

ஜார்க்கண்ட் ஆதிவாசிகள் வரலாற்றில் பொது சொத்துரிமையாய் நிலத்தையும் இயற் கையையும் கொண்டி ருந்த அசல் எஜமானர் கள். அவர்கள், தங்க ளை விட பெரிய அரசு க்கு கப்பம்கட்டி வாழ்ந்த நிலப்பிரபு காலத்தில் குந்தகட்டி அமைப்பு வழியாக குத்த கையாய் அனுபவித்து வந்தார்கள். முதலாளித்துவம் எனும் இன்றைய சமூக அரசியல் காலத்தில் தனிப் பட்ட பட்டாக்களை வைத்திருந்தார்கள். கடைசியாக அவர்கள் நிலம் இல்லாதவர்களாகவும் மற்ற ஆதாரங் களை இழந்தவர்களாகவும் மாற்றப்பட்டு நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள்.  ராஞ்சி சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அருட்தந்தை ஸ்டேன் சுவாமி இதை நேரில் கண்டு, பழங்குடி மக்களின் உரிமைக்காக சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம் 1908, சந்தால் பர்கானாஸ் குத்தகை சட்டம் 1949, அரசியல் சாசனத்தின் ஐந்தாவது அட்டவணை 1950, பட்டியல், பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்புச் சட்டம்) 1989, சமதா தீர்ப்பு, வன உரிமைச் சட்டம் 2006, நிலம்  கையகப்படுத்தல் சட்டம் - 2013, கனிமங்கள் உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப் பட்டுள்ள வழிமுறைகள் ஆகியவற்றை பழங்குடி மக்களி டம் கொண்டு சென்றார். அவர்களுக்கு விழிப்புணர்வு  ஊட்டினார். அதனாலேயே பாஜக அரசு அவரை பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைத்து மருத்துவ உதவி கூடச் செய்யாமல் சாகடிக்கவும் செய்தது.  நாடு முழுவதும் பேரலையை உருவாக்கிய ஸ்டேன் சுவாமி பழங்குடி மக்களின் மனதில் நெருப்பாய் வீற்றி ருக்கும் அக்னி குண்டு. சுரண்டப்படும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்ட போராடிய ஒரு போராளி.

எஸ்.குமார், சென்னை