weather

img

துவங்கியது தென் மேற்குப் பருவ மழை.....

குழித்துறை:
தமிழகம் - கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை வெள்ளியன்று துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்குபருவமழை பெரும் பங்கு வகிக்கிறது.இந்தமழையால், கேரளா, கர்நாடகாவில் இருந்துதிறந்து விடப்படும் உபரி நீரால், தமிழக நீர்நிலைகள் நிரம்பும். வடகிழக்கு பருவ மழையால், தமிழகத்திற்கு கூடுதல் மழை நீர் கிடைக்கும்.இந்த ஆண்டு மழைக்கான பருவக்காற்று, தென் மேற்கில் இருந்து, கடந்த வாரமே வீசத் துவங்கியது. அதனால், அரபிக்கடலில் உருவான, டவ் தே புயல், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை புரட்டி போட்டுள்ளது.இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, இன்று (வெள்ளியன்று) அந்தமானில்துவங்க உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அந்த மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில் : தென்மேற்கு பருவமழை வழக்கமாக, ஜூன் முதல் வாரத்தில் தான் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு முன்னதாகவே துவங்குகிறது.தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்குகிறது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி, நாளை (சனிக்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது, புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சனியன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி, வடமேற்குதிசையில், ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரத்தில், தென்மேற்கு பருவமழை, கேரளாவில், வரும், 31ம் தேதிக்குள் தீவிரமடையும். அப்போது, தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மழை கொட்டத் துவங்கும்.அதன்பின்,கர்நாடகா, மகாராஷ்டிரா என, வட மாநிலங்களுக்கு மழை நகரும் என்கின்றனர் வானிலை ஆராய்ச்சியாளர்கள்.கன்னியாகுமரி மாவட்டத்தில்  கனமழை பெய்து வருகிறது. பேச்சிபாறை அணை நிரம்பியுள்ளது.  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து  மழை பெய்தால்  அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில், இன்று முதல், 24ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் மிதமாகவும், கடலோர பகுதிகளில் லேசானதாகவும் மழை பெய்யும்.வரும், 23, 24ம் தேதிகளில், நீலகிரியில் கன மழை பெய்யும் எனதெரிவிக்கப் பட்டுள்ளது.தமிழக கடலோரம், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்க கடல்பகுதிகளில், சனிக்கிழமையும் ஞாயிற்று கிழமையும்  மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில்,பலத்த காற்று வீசும். எனவே, மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது