weather

img

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை!

சென்னை,பிப்.15- தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும்(பிப். 15, 16) இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும், பிப்ரவரி 17 முதல் 19 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 
ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.