weather

img

ஜன.10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம்....

சென்னை:
தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகம், புதுச்சேரியில் ஜனவரி 10 வரை வடகிழக்கு பருவமழை தொடரும். வடகிழக்கு பகுதியில் இருந்து தொடர்ந்து காற்று வீசிக்கொண்டிருப்பதால் மழை தொடரும்.வடகிழக்கு பருவமழை இயல்பு அளவான 449.7 மி.மீ.க்கு பதில் 477 மி.மீ. பதிவானது. தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 விழுக்காடு அதிகம் பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை 342 மி.மீ.க்கு பதில் 421 மி.மீ. பதிவானது. இது இயல்பை விட 24 விழுக்காடு அதிகம். 2020ம் ஆண்டில் 946 மி.மீ.க்கு பதிலாக 984 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பை விட 4 விழுக்காடு அதிகம்.

கன மழைக்கு வாய்ப்பு
தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜன.1, 2 ஆம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஜன.3, 4 ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;