technology

img

டுவிட்டர் நிறுவனத்திற்கு 1100 கோடி அபராதம் 

உலகின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ட்விட்டர் தனது பயனர்களின் விவரங்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் 1100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பிரபல அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் திரை நட்சத்திரங்கள் என பல தரப்பினரும் டுவிட்டரில் தங்களது கருத்துகளை வெளியிடுகின்றனர். இதனால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயனர்களில் பாதுகாப்பிற்காக டுவிட்டர் கணக்கு தொடங்க தொலைபேசி எண், மின்னஞ்சல் போன்ற விபரங்களை  அந்நிறுவனம் பெற்று வைத்துள்ளது. 
ஆனால் இந்த தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதனால் டுவிட்டர் பயனர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கலிபோர்னியா நீதிமன்றத்தில் பெரல் டிரேட் கமிஷன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் டுவிட்டர் நிறுவனத்திற்கு சுமார் ரூ1,100 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராத தொகையை செலுத்த டுவிட்டர் நிறுவனமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பயனர்களில் தரவுகளை பாதுகாக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


 

;