technology

img

வாட்ஸ்அப்பில் இனி ப்ரொபைஃல் பிக்சருக்கும் ப்ரைவசி!  

பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்துவதற்காக சமூக வலைதள நிறுவனமான வாட்ஸ்அப் தொடர்ந்து பயனர்களுக்கு புதிய அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ப்ரைவேசி செட்டிங்கில் புது அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

அதன்படி, ப்ரைவேசி செட்டிங்கில் பயனர்கள் தங்களை குறித்த விவரங்களை மறைத்து வைத்துக்கொள்ள உதவும் என வாட்ஸ்அப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  

வாட்ஸ்அப் ப்ரைவசியில் லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ், அபோட் போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது ப்ரொபைல் பிக்சரை விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம். மேலும் புதிய வாட்ஸ்அப் குழுக்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் போன்றவற்றிற்கும் ப்ரைவசி கட்டுப்பாட்டு வசதியை வழங்கியுள்ளது மெட்டா நிறுவனம். 

;