technology

img

ஊதிய குறைவால் அதிருப்தியில் உள்ள கூகுள் ஊழியர்கள் 

கூகுளில் பணியாற்றும் ஊழியர்கள் போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்து உள்ளனர்.  

தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் ஆண்டுதோறும், தங்கள் நிறுவன ஊழியர்களிடம் கூகுள்கெய்ஸ்ட் என்ற சர்வேயை நடத்தி வருகிறது. அதன்படி, கூகுள் நிறுவன ஊழியர்களிடம் இந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்வேயில், கூகுள் பணியாளர்கள் அதிருப்தியில் இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது கூகுள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறைவாக உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடுகளும் போதிய அளவில் இல்லை என்றும், இதனால் கூகுள் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாகவும் இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.