புதுதில்லி:
பி.பி.ஓ. தொழிலை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ஐ.டி. என்று அழைக்கப்படுகிற தகவல் தொழில் நுட்பத்துறையில் ( பி.பி.ஓ) பல முக்கிய சீர்திருத்தங்களை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் அறிவித்தது.இந்த நிலையில் ஓ.எஸ்.பி. என்னும் பிற சேவைகள் வழங்குநர்களுக்கான வழிகாட்டுதல்களை தாராளமயமாக்குவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதன் மூலம் பி.பி.ஓ.களுக்கான வலுவான உலகளாவிய இடமாக இந்தியா நிலை நிறுத்தப்படும். உள்நாடு மற்றும் சர்வதேச ஓ.எஸ்.பி.களுக்குஇடையிலான வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி டிவிட்டரில்,பி.பி.ஓ. தொழில்துறையை ஊக்குவிக்கும்வகையில், 2020 நவம்பரில் தாராளமய மாக்கப்பட்ட ஓ.எஸ்.பி. வழிகாட்டுதல்கள் மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவர்த்தகம் மற்றும் ஒழுங்குமுறை தெளிவைமேலும் எளிதாக்குகிறது. இது இணக்கச்சுமையை குறைக்கும். நமது தொழில்நுட்பத்து றைக்கு உதவும் என்று தெரிவித்துள்ளார்.