தெற்கு கொரியா : ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையில் , பாதுகாப்பு சேவைக்காக நான்கு கால் கொண்ட அதி நவீன ரோபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர் . இந்த ரோபோட் அமெரிக்காவைச் சேர்ந்த போஸ்டன் டைனாமிக்ஸ் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது .
இந்த ரோபோட்டில் லிடார் மற்றும் தெர்மல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது . அதன்மூலம், தொழிற்சாலையின் வெப்பத்தன்மை , தீப்பற்றும் அபாயம் போன்றவற்றை இந்த ரோபோட் கண்டறிந்துகொள்ளும் . அதுபோன்ற ஏதேனும் ஆபத்தை உணர்ந்தால் , உடனடியாக கண்காணிப்பு அறைக்கு எச்சரிக்கையை அனுப்பும் . மேலும், எந்த இடத்தில் கோளாறுகள் ஏற்பட்டாலும் , அந்தஇடத்தின் புகைப்படத்தையும் துல்லியமாக அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .
இந்த கண்காணிப்பு ரோபோட் , தானாகவும் இயங்கும் , மேற்படி மனிதர்களாலும் கட்டுப்படுத்தக்கூடும் . இதில் அதிகப்படியான தொழில்நுட்பமிக்க சென்சார்கள் பொறுத்தியுள்ளதால் , இவை கூடுதல் தரவுகளைச் சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது .
இது குறித்துப் பேசிய ஹுண்டாய் நிறுவனத்தின் துணைத் தலைவர் டாங் ஜின் ஹ்யூன் , இந்த தொழிற்சாலை பாதுகாப்பு சேவை ரோபோட் , போஸ்டன் டைனாமிக்ஸ் உடன் ஹுண்டாய் கொண்டிருக்கும் முதல் திட்டம் எனவும் , இந்த ரோபோக்கள் தொழில்துறை தளங்களில் அபாயங்களைக் கண்டறிந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் எனவும் கூறியுள்ளார் .