technology

img

விவோ நிறுவனத்தின் வி23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம்  

விவோ நிறுவனத்தின் வி23 ப்ரோ வரும் 13 ஆம் தேதி முதலும், வி23 வரும் 19 ஆம் தேதி முதலும் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் வி23 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வி23 ப்ரோ வரும் 13 ஆம் தேதி முதலும், வி23 வரும் 19 ஆம் தேதி முதலும் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வி23 சீரிஸ் ஸ்மார்போன்கள் முதல்முறையாக இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கலர் மாறும் கிளாஸ்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.  இதில் இடம் பெற்றுள்ள புளோரைட் ஏஜி கிளாஸின் மீது சூரிய ஒளி மற்றும் புற ஊதா கதிர்கள் பட்டால் அதன் நிறம் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி23 5ஜி இன் 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.29,990 மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 12 ஜிபி ரேம் விலை ரூ.34,990. அதே நேரத்தில் விவோ வி23 ப்ரோ 5ஜி இன் 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி சேமிப்பகத்தின் விலை ரூ. 38,990 மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 12 ஜிபி ரேம் விலை ரூ.43,990 என தெரிவிக்கப்பட்டுள்ளது.