tamilnadu

img

நூறுநாள் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டம்

மதுராந்தகம், ஆக. 27 - தின்னலூர் ஊராட்சியில் நூறு நாள் வேலை கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,  அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட் பட்ட தின்னலூர் ஊராட்சியில் 400க்கும் மேற்பட்டவர்கள் மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்து  வருகின்றனர். கடந்த சில மாதங்க ளாக 55 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை தர ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை கேட்டும், ஊர டங்கால்  பாதிக்கப்பட்டுள்ள அனை வருக்கும் 7500 ரூபாய் நிவாரணம் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தின்னலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், நிர்வாகிகள் செல்வராஜ், சுப்பரமணி, கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கட்சி யின் கிளை செயலாளர் ரமேஷ்  உள்ளிட்டோர் பேசினர். தலைவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அச்  சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலு வலர் செப்.1 முதல் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

;