tamilnadu

img

செங்கை புத்தகத் திருவிழா ஜூலை மாதம் நடத்த முடிவு

செங்கல்பட்டு, ஜன.1- செங்கல்பட்டில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,  செங்கை  பாரதி யார் மன்றம்  இணைந்து தொடர்ந்து  3 ஆண்டுகளாக  செங்கை புத்தகத் திரு விழாவை நடத்தி வருகின்ற னர். கடந்த  டிசம்பர் மாதம் நடைபெற்ற புத்தகத் திரு விழாவில் பிரபல பதிப்ப கங்கள், கலந்து கொண்டு தங்கள் வெளியீட்டில் வந்த புத்தகங்களைக் காட்சிப்ப டுத்தினர். மேலும்  மாலை நேரங்களில்  எழுத்தாளர்க ளின் கருத்தரங்கங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. இந்த புத்தகத்திரு விழா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 4வது செங்கை புத்தகத் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாயன்று (டிச. 31) செங்கல்பட்டில் புத்தகத் திருவிழா தலைவர் க.அரி தலைமையில் நடை பெற்றது.  இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா கலந்து கொண்டு ‘இலக்கி யம் படி இதயம் விரியும்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் 4வது புத்தகத் திருவிழாவினை ஜூலை மாதம் நடத்துவது எனவும், கிராமங்கள் தோறும் புத்தகத்தை எடுத்துச் செல்ல ஏதுவாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரச்சாரம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. செங்கை புத்தகத் திரு விழாவின் செயலாளர்என்.மாதவன், பொருளாளர் வரத ராஜன், நிர்வாகிகள் கணபதி, கிள்ளிவளவன், வீரன், தன்செழியன், தீனதயாளன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;