tamilnadu

img

பாதுகாப்பு கோரி ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டம்

செங்கல்பட்டு, ஜூன் 23 - மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவல கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாது காப்பு கோரி வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகமும், வட்டாட்சியர் அலுவலகமும் ஒரே வளா கத்தில் செயல்படுகின்றன. அந்த வளா கத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவல கத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டுள்ளது. இத னையறிந்த ஆட்சியர், வட்டாட்சியர் அலுவ லக ஊழியர்கள் பாதுகாப்பு  கோரி செவ்வா யன்று (ஜூன் 23) பணிக்குச் செல்லாமல் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்  பட்டது. இருந்தபோதிலும் ஊழியர்கள் அனை வருக்கும் தோற்று பரிசோதனை செய்ய வலி யுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் என்ற  அரசு உத்தரவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் அமல்படுத்த வேண்டும், பாது காப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், ஆட்சியரை சந்தித்து வலியு றுத்தினர்.

;