செங்கல்பட்டு, ஆக. 20 - செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து வியாழனன்று (ஆக.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு நகரப் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை உள்ளது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் கொரானா தொற்று சிறப்பு சிகிச்சை மையம், பரி சோதனை மையம் ஆகியவை செயல்படுகின்றன. இங்கு மருத்து வர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் பல காலியாக உள்ளன. இதனால் பொதுமருத்துவத்திற்கு வருபவர்க ளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவ தில்லை. மேலும், கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெறுவோ ருக்கு வெந்நீர், உணவு, கழிப்பறை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. கொரோனா வார்டு மற்றும் மருத்துவ மனை வளாகம் முழுவதும் மருத்துவ கழிவுகளையும், குப்பைகளையும் பாதுகாப்பின்றி திறந்தவெளியில் கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் மருத்துவ மனைக்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணி யாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், கொரோனா வார்டில் வெந்நீர், உணவு மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும், பொது மருத்து வத்திற்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு வட்டச் செய லாளர் கே.வேலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வா.பிர மிளா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.மோகனன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், வட்டக்குழு உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் பேசினர்.