tamilnadu

img

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்களை பணிக்கு செல்லவிடாமல் தாக்குகின்ற காவல்துறையை கண்டித்து வெள்ளியன்று (ஜூன் 26) செங்கற்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் சம்மேளன மாநில இணைச்செயலாளர் அருள்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் செங்கல்பட்டு கிளை செயலாளர் என்.பால்ராஜ், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலச் இணைச் செயலாளர் சர்க்கரை, பொறியாளர் அமைப்பின் செங்கல்பட்டு கிளை செயலாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் பேசினர்.