tamilnadu

img

பிரதமரிடம் நேருக்குநேர் வாதிடும் தலைவர்கள் தேவை!

ஹைதராபாத்:
பிரதமரிடம் வாதிடும் துணிச்சலுள்ள தலைவர்கள் தற்போது இல்லை என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள்அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷிகூறியுள்ளார்.காங்கிரஸ் தலைவரும் மத்திய முன் னாள் அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி அண்மையில் காலமான நிலையில், அவருக்கான இரங்கல் கூட்டம் ஹைதராபாத்தில் சில நாட்களுக்கு முன்பு நடை பெற்றது. அப்போதுதான் இவ்வாறு ஜோஷி பேசியுள்ளார்.“கடந்த 1990-களில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் நானும், ஜெய்பால் ரெட்டியும் உறுப்பினராக இருந்தோம். அப்போது, எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஒவ்வொரு மட்டத்திலும் ரெட்டி தனது கருத்தை உறுதியுடன் வெளிப்படுத்துவார். ஐ.கே. குஜ்ரால்அரசில், ஜெய்பால் ரெட்டி அமைச்சராக பதவியேற்றார். அப்போதும், நாடாளுமன்றக் குழுவின் கருத்துக்களை பிரதமரிடம் வெளிப்படையாக விவாதிக்கும் பழக்கம் ரெட்டியிடம் இருந்தது. இவ்வாறு பிரதமருடன் நேருக்குநேர் வாதிடும் ஜெய்பால் ரெட்டியை போன்ற ஒரு தலைவருக்கான தீவிரத் தேவை இன்றுஅதிகம் இருப்பதாக உணர்கிறேன். அந்ததலைவர் கொள்கைகளின் அடிப்படையில்- பயமின்றி- பிரதமர் மகிழ்ச்சி அடைவாரா, கோபப்படுவாரா? என்று கவலைப் படாமல் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்துபவராகவும், பிரதமருடன் வாதிடுபவராகவும் இருக்க வேண்டும்” என்று முரளி மனோகர் ஜோஷி தெரிவித்துள்ளார்.

;